×

உடல் நலம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி மின்துறை தனியார்மயத்தை கண்டித்து திருச்சியில் 2வது நாள் சாலை மறியலில் ஈடுபட்ட 70 அரசு ஊழியர்கள் கைது

திருச்சி, பிப். 4:  புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் தொடர் மறியல் மற்றும் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி திருச்சி பழைய கலெக்டர் அலுவலக சாலையில் நேற்று 2வதுநாளாக துணைத்தலைவர் சகாதேவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் கலெக்டர் அலுவலக சாலையில் மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 70 பேரை போலீசார் கைது செய்து அப்பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

திருச்சி, பிப். 4: மின்துறை தனியார் மயத்தை கண்டித்து மின்வாரிய ஊழியர்கள் ஸ்டிரைக் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விவசாயிகளுக்கு எதிரான 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும், மின் சட்ட மசோதா 2020ஐ உடனே திரும்ப பெற வேண்டும், காலிபணியிடங்களை நிரப்ப வேண்டும், மின்துறையை தனியாருக்கு கொடுக்கக் கூடாது என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் மின்வாரிய ஊழியர்கள் நேற்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
 இதே கோரிக்கைகளை வலியுறுத்தி தலைமை தபால் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில், சிஐடியு மாவட்ட தலைவர் ரெங்கராஜ் தலைமை வகித்தார். இதில் தொமுச மலையாண்டி, மின்வாரிய ஊழியர் கூட்டமைப்பு நிர்வாகி சிவசாமி, சிஐடியு, எம்பிஎப் எம்ப்ளாய்ஸ் பெடரேசன் உள்பட ஏராளமான ஊழியர்கள் கலந்துகொண்டனர். இதில் திருச்சி மாவட்டத்தில் 2,730 மின்ஊழியர்கள் பணியில் உள்ளனர். இவர்களில் 700 ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

Tags : servants ,road blockade ,Trichy ,
× RELATED தேசிய குடிமை பணியாளர்கள் நாள் முதல்வர் வாழ்த்து