×

துறையூரில் குடிசை வீட்டில் தீ ரூ.1லட்சம் பொருட்கள் சேதம்

துறையூர், பிப். 4:துறையூர் நகராட்சிக்குட்பட்ட முத்து நகர் பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து (34).கூலி வேலை செய்து வருகிறார் . இவர் தாயுடன் அப்பகுதியில் உள்ள தங்கராசு என்பவரது வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வருகிறார். இந்நிலையில் நேற்று காலை இவரின் வீட்டு அருகில் குப்பையில் தீ வைக்கப்பட்டதால் அதிலிருந்து தீப்பொறி இவரது கூரை வீட்டின் மேல் பட்டு வீடு தீப்பிடித்து எரிந்து முற்றிலும் சாம்பலானது. இதில் வீட்டில் இருந்த ரொக்கப்பணம் ரூ 20,000 மற்றும் ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, டிவி மிக்ஸி கிரைண்டர் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள் என சுமார் ஒரு லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பலானது. சம்பவ இடத்திற்கு வந்த துறையூர் தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர்.

Tags : Thuraiyur ,
× RELATED துறையூர் அருகே கார், ஆட்டோ மோதல் முதியவர் பரிதாப பலி