×

மின்வாரிய ஊழியர்கள் ஸ்டிரைக், ஆர்ப்பாட்டம் மாநகர காவல், வட்டார போக்குவரத்து துறை சார்பில் ஹெல்மெட் விழிப்புணர்வு இருசக்கர வாகனபேரணி

திருச்சி, பிப். 4: தேசிய அளவில் சாலை விபத்துகள் தவிப்பது குறித்த வருடந்தோறும் சாலை பாதுகாப்பு வார விழா நடைபெற்று வருகிறது. இந்தாண்டு மத்திய, மாநில அரசுகளின் உத்தரவுப்படி 32வது சாலை பாதுகாப்பு மாத விழா கடந்த 18ம் தேதி முதல் வரும் பிப்ரவரி 17ம் தேதி வரை நடக்கிறது. இதையடுத்து மாநகர காவல்துறை சார்பில் போக்குவரத்து பிரிவு சார்பில் முக்கிய இடங்களில் சாலை விழிப்புணர்வு குறித்து துண்டு பிரசுரம் வழங்கப்பட்டு வருகிறது. இதில் மாநகர காவல்துறை சார்பில் நேற்று ஹெல்மெட் விழிப்புணர்வு இருசக்கர பேரணி நடந்தது. திருச்சி உழவர் சந்தையில் இருந்து துவங்கிய பேரணியை மாவட்ட கலெக்டர் சிவராசு மற்றும் மாநகர கமிஷனர் லோகநாதன் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

பேரணி, எம்ஜிஆர் சிலை, தலைமை தபால் நிலையம், புதுக்கோட்டை ரோடு, டிவிஎஸ் டோல்கேட் வழியே அண்ணா விளையாட்டு அரங்கம் சென்றடைந்தது. இந்த பேரணியில் 100க்கும் மேற்பட்ேடார் கலந்து கொண்டனர். மேலும் சாலைவிதிகளை மதிப்போம், பைக் ஓட்டும் போது ஹெல்மெட் அணிவோம் என உறுதிமொழி எடுத்துகொண்டனர். இதில் மாநகர துணை கமிஷனர்கள் பவன்குமார் ரெட்டி, வேதரத்தினம் உள்ளிட்ட போலீசார் கலந்து கொண்டனர். இதே போல் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு பேரணி திருச்சி மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இருந்து தேசிய கல்லூரி வரை நேற்று நடந்தது. விழிப்புணர்வு பேரணியை திருச்சி துணை போக்குவரத்து ஆணையர் அழகரசு துவக்கி வைத்தார். இதில் மேற்கு, கிழக்கு மற்றும் ரங்கம் வட்டார போக்குவரத்து அலுவலக மோட்டார் வாகன ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Helmet awareness motorcycle rally ,transport department ,
× RELATED தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு...