குடும்ப தகராறில் கணவர் மாயம் போலீசில் மனைவி புகார்

திருச்சி, பிப். 4: திருச்சி புத்தூர் தெற்கு முத்துராஜா தெருவை சேர்ந்தவர் சந்தானம்(37). பொதுப்பணித்துறை அலுவலகத்தில் கான்ட்ராக்ட் வேலை செய்து வந்தார். இவரது மனைவி தனுஜா (26). எலக்ட்ரிக்கல் கடையில் வேலை செய்து வருகிறார். சந்தானம் குடிபழக்கம் உடையவர். தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வருவாராம். இதனால் தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்படும். இந்நிலையில் கடந்தாண்டு செப்டம்பர் 6ம் தேதி ஏற்பட்ட தகராறில் தனுஜா கோபித்து கொண்டு தாய் வீட்டிற்கு சென்றார். அப்போது வீட்டை விட்டு வெளியில் சென்றவர் வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து தனுஜா அளித்த புகாரின்பேரில் உறையூர் போலீசார் வழக்கு பதிந்து அவரை தேடி வருகின்றனர்.

Related Stories:

>