×

ஆம்ஸ்ட்ராங் மனைவி தேர்தலில் போட்டி?

தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி தென் மண்டல பொறுப்பாளர்கள் அறிமுக கூட்டம் கடையநல்லூரில் நடந்தது. அப்போது மாநில பொதுச்செயலாளர் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் புதிதாக நியமனம் செய்யப்பட்ட நெல்லை, தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர்களுக்கு நியமன கடிதத்தை வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், நிர்வாகிகளிடம் கலந்து பேசி, வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவது குறித்து விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும். தமிழகத்தில் உள்ள எல்லா மாவட்டங்களிலும் கட்சி நிர்வாகிகளை நியமித்து வருகிறோம். அனைத்து பகுதிகளிலும் கட்சி மிக வலிமையாக உள்ளது. எனது கணவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு இதுவரை தீர்வு கிடைக்கவில்லை. அவரது படுகொலை அரசியல் ரீதியாகவா, ஜாதி ரீதியாகவா, பொருளாதார ரீதியாக நடந்துள்ளதா என்பது குறித்து இதுவரை எங்களுக்கு சரியான விடை கிடைக்கவில்லை என்பதால் தவித்துக் கொண்டிருக்கிறேன். நாங்கள் ஆட்சி அதிகாரத்திற்கு வந்த பிறகு தான் இது போன்ற பிரச்னைக்கெல்லாம் முடிவு கிடைக்கும்’ என்றார்.

* விருப்ப மனு அளிக்க அவகாசம் நீட்டிப்பு: தவெக அறிவிப்பு
தவெக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் வேட்பாளராக போட்டியிட விரும்பும் கழக தோழர்கள் தங்களுக்கான விருப்ப மனுவைப் பெறுவதற்கும் அதனை சமர்ப்பிப்பதற்கும் நேற்று கடைசி தேதி என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கழகத்தின் பல்வேறு நிகழ்ச்சிகள் காரணமாக, வழங்கப்பட்ட கால அவகாசத்திற்குள் பெரும்பாலான கழகத் தோழர்களால் விருப்ப மனுவைச் சமர்ப்பிக்க முடியாமல் போனதாக தெரிவித்து வருகின்றனர். எனவே தோழர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, விருப்ப மனுவைப் பூர்த்தி செய்து அளிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்படுகிறது. அதன்படி, வரும் 20ம் தேதி (20.2.2026) வரை தங்களது விருப்ப மனுவை தலைமை நிலைய செயலகத்தில் சமர்ப்பிக்கலாம். விருப்ப மனுக்களை சமர்ப்பிக்க அதுவே கடைசி நாள். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : Armstrong ,Tamil Nadu Bahujan Samaj Party ,Kadayanallur ,State General Secretary ,Porkodi Armstrong ,Nellai ,and Thoothukudi ,
× RELATED ராமதாஸ் உடன் சசிகலா சந்திப்பு!