தொழிலாளர் சட்ட நகல் எரிப்பு போராட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே விஷம் குடித்து இளம்பெண் தற்கொலை

திருக்காட்டுப்பள்ளி, பிப்.4: திருக்காட்டுப்பள்ளி அருகே இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். திருக்காட்டுப்பள்ளி அருகே இளங்காடு கீழத்தெரு எத்திராஜ் மகன் உதயகுமார்(45). இவரது மகள் மவுலிகா (18). இவர் கடந்த மாதம் 28ம் தேதி வீட்டில் இருந்த எலிபேஸ்ட்டை தின்று மயங்கி விழுந்தார். உடனடியாக திருக்காட்டுப்பள்ளி அரசு பொது மருத்துவமனையில் முதலுதவி அளித்து பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றுமுன்தினம் இறந்தார். திருக்காட்டுப்பள்ளி சப்இன்ஸ்பெக்டர் முத்துக்கிருஷணன் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.

Related Stories:

>