வாக்குச்சாவடி மையங்களில் ஆய்வு

பொன்னமராவதி, பிப். 4: பொன்னமராவதி தாலுகாவுக்கு உட்பட்ட இடையாத்தூர், கொன்னையம்பட்டி, காரையூர், கீழத்தானியம், மேலத்தானியம், ஒலியமஙகலம், மறவாமதுரை உட்பட பல்வேறு வாக்குச்சாவடி மையங்களில் தாசில்தார் ஜெயபாரதி ஆய்வு செய்தார். அப்போது வாக்குச்சாவடி மையங்களுக்கு தேவையான மின்சாரம், கட்டிடம், தண்ணீர், கழிப்பிடம் உள்ளிட்ட வசதிகள் இருக்கிறதா என்று பார்வையிட்டார். ஆய்வின்போது வருவாய் ஆய்வாளர்கள் இளஞ்சியம், மரியசெல்வம், கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் உடனிருந்தனர்.

Related Stories:

>