×

அண்ணா நினைவு தினம் அனுசரிப்பு

புதுக்கோட்டை, பிப். 4: புதுக்கோட்டை மாவட்டத்தில் அண்ணா நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. திமுக சார்பில் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் செல்லப்பாண்டியன் தலைமையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நகர செயலாளர் நயினா முகமது, முன்னாள் எம்எல்ஏ கவிதைபித்தன், சந்திரசேகரன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சண்முகம் பங்கேற்றனர். அதிமுக சார்பில் நகர செயலாளர் பாஸ்கர் தலைமையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. முன்னாள் எம்எல்ஏ கார்த்திக் தொண்டைமான், செல்லதுரை உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மதிமுக சார்பில் மாவட்ட பொருளாளர் கலியமூர்த்தி தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. தேமுதிக சார்பில் மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன் தலைமையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

அறந்தாங்கி: தெற்கு மாவட்ட திமுக சார்பில் அறந்தாங்கியில் உள்ள அண்ணா சிலைக்கு தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ரகுபதி எம்எல்ஏ தலைமை வகித்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தெற்கு மாவட்ட திமுக அவைத்தலைவர் பொன்துரை முன்னிலை வகித்தார். முன்னாள் எம்எல்ஏ உதயம்சண்முகம், நகர திமுக செயலாளர் ஆனந்த், தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் பொன்கணேசன் உள்ளி–்ட்ட பலர் பங்கேற்றனர். இதேபோல் அறந்தாங்கி நகர, வடக்கு ஒன்றியம் மற்றும் தெற்கு ஒன்றிய அதிமுக சார்பில் அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. அறந்தாங்கி தெற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் பெரியசாமி தலைமை வகித்து அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தார். வடக்கு ஒன்றிய செயலாளர் வேலாயுதம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags : Anna Memorial Day ,
× RELATED இன்று அண்ணா நினைவு நாள் கோயில்களில் பொது விருந்து: அமைச்சர்கள் பங்கேற்பு