×

மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு கலப்பட மருத்துவமுறை ரத்துகோரி பெரம்பலூரில் மருத்துவர்கள் உண்ணாவிரத போராட்டம்

பெரம்பலூர், பிப்.4: இந்திய மருத்துவ சங்க பெரம்பலூர் கிளையின் சார்பாக கலப்பட மருத்துவ முறையை ரத்து செய்ய வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்ட அரசுத் தலைமை மருத்துவ மனை நுழைவு வாயிலில் உண்ணா விரத போராட்டம் நடைபெற்றது. இந்திய மருத்துவ சங்கத்தின் பெரம்பலூர் கிளையின் தலைவர் டாக்டர் வல்லபன் தலைமை வகித்தார். சங்கத்தின் செயலாளர் டாக்டர் ராஜாமுகமது, பொருளாளர் சுதாகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்திய மருத்துவ சங்கத்தின் முன்னாள் தலைவர் டாக்டர் தங்கராஜ் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி வைத்தார்.

இந்த போராட்டத்தில் பெரம்பலூர் மாவட்ட மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குநர் திருமால், முன்னாள் இணை இயக்குனர் டாக்டர் குணகோமதி, டாக்டர் அன்பரசு, பால்ராஜ், அறிவழகன், அரும்பாவூர் கோபால், சர்வீஸ் டாக்டர்ஸ் அசோசியேசன் மாவட்ட தலைவர் ரமேஷ், லப்பைக்குடிக்காடு தினகரன், காதி, திட்டக்குடி முல்லைநாதன், நளினாதேவி, பிசியோதெரபிஸ்ட் டாக்டர் சுப்பிரமணியம், தோல்நோய் மருத்துவர் இளங்கோவன், அய்யாதுரை, பல் டாக்டர்கள் செல்வி, நக்கீரன் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : Doctors ,hunger strike ,Perambalur ,cancellation ,
× RELATED பெரம்பலூர் மாவட்ட எல்லைக்குள் சிறுத்தை: தவறான தகவல்