×

நெதர்லாந்தை வீழ்த்தியது அமெரிக்கா

சென்னை: உலகக் கோப்பை டி20 போட்டியில் நேற்று, நெதர்லாந்து அணியை வீழ்த்தி அமெரிக்கா வெற்றி பெற்றது.  உலகக் கோப்பை டி20 21வது போட்டி, சென்னையில், குரூப் ஏ-பிரிவில் நேற்று நடந்தது. அதில் அமெரிக்கா – நெதர்லாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற நெதர்லாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது.

முதலில் களமிறங்கிய அமெரிக்கா அணியின் துவக்க வீரர் ஷயான் ஜஹாங்கீர் 20 ரன்னில் கிளீன் போல்டானார். மற்றொரு துவக்க வீரரும், கேப்டனுமான மொனாங்க் படேலுடன் (36 ரன்) இணை சேர்ந்து ஆடிய சைதேஜா முக்கமல்லா 51 பந்துகளில் 4 சிக்சர், 5 பவுண்டரிகளுடன் 79 ரன் விளாசி அவுட்டானார்.

20 ஓவர் முடிவில் அமெரிக்கா 6 விக்கெட் இழப்புக்கு 196 ரன் குவித்தது. சுபம் ரஞ்ஜனே 48 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். நெதர்லாந்து தரப்பில் பாஸ் டி லீட் 3 விக்கெட் வீழ்த்தினார். இதைத்தொடர்ந்து 197 ரன் இலக்கை துரத்திய நெதர்லாந்து அணி 15.5 ஓவரில் 103 ரன்னில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக பாஸ் டி 20 ரன் எடுத்தார். இதனால் அமெரிக்க அணி 93 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Tags : USA ,Netherlands ,Chennai ,World Cup T20 ,
× RELATED லண்டன் நிறுவனம் விலகியது; ஆர்சிபி...