×

‘’விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்’’ நிகழ்ச்சி கரூரில் 7, 8ம் தேதிகளில் உதயநிதி பங்கேற்கிறார்

கரூர், பிப்.4: கரூர் மாவட்ட திமுக சார்பில் அவசர ஆலோசனை செயற்குழு கூட்டம் திமுக அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது. மாவட்ட அவைத்தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். மாவட்ட திமுக பொறுப்பாளர் செந்தில்பாலாஜி கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில், மாநில விவசாய அணிச் செயலாளர் சின்னசாமி, மாநில நெசவாளர் அணித்தலைவர் நன்னியூர் ராஜேந்திரன், மாநில சட்டத்துறை இணைச் செயலாளர் மணிராஜ், மாநில நெசவாளர் அணிச் செயலாளர் பரணிமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கரூர் மாவட்டத்தில் பிப்ரவரி 7 மற்றும் 8ம்தேதி என இரண்டு நாட்கள் விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் என்ற நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சிகளில் மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசவுள்ளார். இவரின் வருகை குறித்து இந்த அவசர கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

இதன்படி, வரும் 7ம்தேதி காலை 9மணிக்கு ராயனூரில் நடைபெறும் இளைஞரணி கூட்டத்தில் கலந்து கொள்ளும் அவர், தொடர்ந்து அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி, சின்னதாராபுரம், க.பரமத்தி, வேலாயுதம்பாளையம், கரூர் பஸ் ஸ்டாண்ட், தாந்தோணிமலை, சர்ச் கார்னர், பஞ்சமாதேவி, வெங்கமேடு, வடிவேல் நகர் போன்ற பகுதிகளில் இரவு 7மணி வரை நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பேசுகிறார். மறுநாள் 8ம்தேதி காலை 9மணிக்கு கரூரில் பிஎல்சியுடனான கூட்டம் நடைபெறுகிறது. தொடர்ந்து, பழைய ஜெயங்கொண்டம், காணியாளம்பட்டி, தரகம்பட்டி, வெள்ளியணை, லாலாப்பேட்டை, குளித்தலை, அய்யர்மலை, தோகைமலை, காவல்காரன்பட்டி ஆகிய பகுதிகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு பேசுகிறார்.

Tags : Udayanithi ,Karur ,
× RELATED கரூர் மாநகர பேருந்து நிலையத்தில்...