×

9 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி 2 வது நாளாக சாலை மறியல்: 82 பேர் கைது

கரூர், பிப். 4: கரூரில் பல்வேறு 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இரண்டாவது நாளாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர் சங்கங்களை சேர்ந்த 82 பேரை போலீசார் கைது செய்தனர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் கரூர் கிளையின் சார்பில் இழந்ததை மீட்டிட இருப்பதை காத்திட தொடர் மறியல் போராட்டம் மற்றும் சிறை நிரப்பும் போராட்டம் என்ற அடிப்படையில் கரூர் தாலுகா அலுவலகம் முன் நேற்று இரண்டாவது நாளாக மறியல் போராட்டம் நடைபெற்றது. கரூர் மாவட்டத் தலைவர் சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற இந்த மறியல் போராட்டத்தில் 52 பெண்கள் உட்பட 82 பேரை போலீசார் கைது செய்தனர். புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். அகவிலைப்படி, சரண்டர் உள்ளிட்ட பறிக்கப்பட்ட உரிமைகளை மீண்டும் வழங்க வேண்டும். தொகுப் பூதியத்தில் பணிபுரியும் சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், வளர்ப்புற நு£லகர்கள், எம்ஆர்பி செவிலியர்கள் ஆகியோர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

Tags :
× RELATED ஆத்ம நேச ஆஞ்சநேயர் கோயிலில் ராம நவமி விழா