தோகைமலை அருகே மதுபானம் பதுக்கி விற்ற 2 பேர் கைது

தோகைமலை, பிப்.4: தோகைமலை காவல்சரகம் பச்சனாம்பட்டி ரோடு அருகே உள்ள தனியார் மெஸ் பின்புறம் சேப்ளாப்பட்டியை சேர்ந்த காத்தமுத்து (48) என்பவர் அரசு அனுமதியின்றி மதுபானங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து உள்ளார். இதேபோல் செம்பாறைபட்டியில் பெட்டிக்கடை நடத்தி வரும் இரணியமங்களம் ஊராட்சி மேலப்பட்டியை சேர்ந்த முருகன் (38). என்பவரும் தனது பெட்டிக்கடையில் மதுபானங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து உள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த தோகைமலை போலீசார் காத்தமுத்து, முருகன் ஆகியோர் மீது வழக்கு பதிந்து கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories:

>