கரூர் ரயில் நிலையத்தில் பொது மேலாளர் ஆய்வு

கரூர், பிப். 4: கரூர் ரயில் நிலையத்தில் தென்னக ரயில்வே பொது மேலாளர் ஜான்தாமஸ் ஆய்வு மேற்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் கோட்டத்திற்குட்பட்ட கரூர் ரயில் நிலையத்தில் நேற்று மதியம் தென்னக ரயில்வே பொதுமேலாளர் ஜான்தாமஸ் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பிளாட்பார்ம், டிக்ெகட்புக்கிங் அறை போன்ற அனைத்து பகுதிகளையும் ஆய்வு மேற்கொண்டு பார்வையிட்டார். தொடர்ந்து, ரயில்வே வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த கழிவு நீர் மறுசுழற்சி இயந்திரத்தை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அதிகாரிகள் உடனிருந்தனர்.இதனைத் தொடர்ந்து பொது மேலாளர் தெரிவித்துள்ளதாவது: கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக பயணிகள் ரயில் இயக்கப்படாமல் உள்ளது. மங்களூரில் இருந்து கரூர் வழியாக சென்னைக்கு சென்று வந்த மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில் கொரோனா சமயத்தில் நிறுத்தப்பட்டது. ரயில்வே நிர்வாக அனுமதி கிடைத்ததும் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். சேலம், கரூர், திண்டுக்கல் இடையே இரட்டை வழிப்பாதைக்கான முன்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது என்றார்.

Related Stories:

>