×

சென்னையில் 13 லட்சம் முதியவர்களுக்கு தடுப்பூசி: மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தகவல்

சென்னை: சென்னையில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடர்பாக ஆய்வு செய்ய அமைக்கப்பட்டுள்ள மாவட்ட பணிக்குழு தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நேற்று ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது.   மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் சுகாதாரத்துறை இணை ஆணையர் திவ்ய தர்ஷினி, கல்வி துறை இணை இயக்குனர் சங்கர்லால் குமாவத், மாநகர நல அலுவலர் ஜெகதீசன், மருத்துவ அலுவர்  ஹேமலதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இது தொடர்பாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறியதாவது :  முன்களப் பணியாளர்களில் 1 லட்சத்து 46 ஆயிரம் பேர் பதிவு செய்துள்ளனர். அதில் 20 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போட்டுள்ளோம். . 10 லட்சம் டோஸ் தடுப்பூசி மாநகராட்சியிடம் உள்ளது. பாதுகாப்பான முறையில் சேமித்து  வைக்கப்பட்டுள்ளது.  

47 மையங்களில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. மையங்களை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நாளொன்றுக்கு 10 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. சென்னையில் முன்கள  பணியாளர்களுக்கு தடுப்பூசி போடும் பணியை 15 நாட்களில் முடிக்க திட்டமிட்டு உள்ளோம். இதனைத் தொடர்ந்து 13 லட்சம் முதியவர்களுக்கு போடும் பணி தொடங்கும்.  இவ்வாறு கூறினார்.

Tags : Prakash ,Chennai ,
× RELATED ஆவடி அருகே நகைக்கடைக்குள் புகுந்து...