×

இளம்பெண் திடீர் மாயம் உறவினர் வீட்டில் தங்கியிருந்த

செய்யாறு, பிப்.14: செய்யாறு அருகே உறவினர் வீட்டில் தங்கியிருந்த இளம் பெண் மாயமானதை தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 25 வயது இளம்பெண். இவர் கடந்த சில மாதங்களாக திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் காலை முதல் இளம்பெண்ணை காணவில்லையாம். அதிர்ச்சியடைந்த உறவினர்கள், அக்கம்பக்கம் என பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. பின்னர், உறவினர்கள் இளம் பெண்ணின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, இளம்பெண்ணின் தந்தை மோரணம் போலீசில் நேற்று புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags : Cheyyar ,Melmalaiyanur ,Villupuram district ,
× RELATED லாரி மீது ேவன் மோதி டிரைவர் பலி வந்தவாசி அருகே