×

அம்மா உணவகத்துக்கு மளிகை பொருட்கள், காய்கறி வழங்கியதற்காகமாநகராட்சி 33 கோடி பாக்கி வைத்துள்ளது: டியுசிஎஸ் தொழிலாளர்கள் குற்றச்சாட்டு

சென்னை: டியுசிஎஸ் நிறுவனத்தின் தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் ராஜன் சாமிநாதன் (எல்பிஎப்), பி.அன்பழகன் (ஐஎன்டியுசி), வி.கவியரசன் (ஜெஎம்எஸ்) ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை: திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு பண்டக சாலை(டியுசிஎஸ்) மிகவும் பழமை வாய்ந்தது. டியுசிஎஸ் மூலம் ரேஷன் கடைகள், மளிகை பிரிவுகள், எரிவாயு மற்றும் பெட்ரோல் நிலையங்கள், காய்கறி அங்காடிகள், மருந்து கடைகள் என மக்களின்  அன்றாட தேவைகளை பூர்த்தி செய்து வருகிறது. கடந்த 2013ம் ஆண்டு முதல் தமிழக அரசினால் ஆரம்பிக்கப்பட்டு, சென்னை மாநகராட்சியால் நடத்தப்பட்டு வரும் அம்மா உணவகம் இன்று சென்னை முழுவதும் பல்வேறு இடங்களில்  செயல்படுகிறது. இந்த அம்மா உணவகங்களுக்கு டியுசிஎஸ் நிறுவனத்தினால் நடத்தப்பட்டு வரும் மளிகை பிரிவுகள், எரிவாயு கிளைகள், காற்கறி அங்காடிகள் மூலம்தான் தினசரி பொருட்கள் சப்ளை செய்யப்படுகிறது. அதன்படி மாதம் 4 கோடி  வரை மளிகை, காய்கறி பொருட்கள் அனுப்பி வைக்கப்படும்.

இதுபோன்ற டியுசிஎஸ் நிறுவனத்தில் இருந்து அனுப்பப்படும் பொருட்களுக்கு சென்னை மாநகராட்சி சார்பில் ஒவ்வொரு மாதமும் பணம் செலுத்தினால் ஊழியர்களுக்கு சம்பளம் உள்ளிட்ட செலவுக்கு பயன்படும். ஆனால், ஒரு மாதத்திற்கு கோடி  கணக்கில் பொருட்கள் சப்ளை செய்யப்பட்டாலும் மாநகராட்சி திரும்பி செலுத்தும் தொகையோ சில லட்ச ரூபாய் மட்டுமே. இதனால், தற்போதுவரை சென்னை மாநகராட்சி, டியுசிஎஸ் நிறுவனத்திற்கு தரவேண்டிய பாக்கி தொகை 33 கோடி  வரை உள்ளது.
எனவே தமிழக அரசு கவனம் செலுத்தி சென்னை மாநகராட்சியிடம் இருந்து வர வேண்டியுள்ள 33 கோடியை உடனடியாக விடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Tags : corporation ,TUCS ,Amma Restaurant ,
× RELATED மாநகராட்சி மேயர், கமிஷனர் வரிசையில் நின்று வாக்களிப்பு