மணல் திருட்டு லாரி, டூ வீலர் பறிமுதல்

சிவகாசி, பிப். 4: சிவகாசி அருகே மணல் திருட்டில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர். மேலும் மணல் திருட்டு பயன்படுத்தப்பட்ட லாரி, டூவீலரையும் பறிமுதல் செய்தனர்.சிவகாசி அருகே மங்களம் கண்மாய் பகுதியில் விஏஓ பாண்டி, ஆர்.ஐ கிருஷ்ணமூர்த்தி, உதவியாளர் பாண்டி ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மணல் ஏற்றிவந்த லாரி மற்றும் டூவீலரை பிடித்து விசாரித்தனர். அனுமதியின்றி மணல் அள்ளி வந்தது தெரிய வந்தது. உடனடியாக மணல் ஏற்றிவந்த லாரி மற்றும் டூ வீலரை பறிமுதல் செய்தனர். மேலும் மணல் திருட்டில் ஈடுபட்ட லாரி உரிமையாளர் கோபாலன்பட்டி முருகன், டிரைவர் மற்றும் நான்கு பேர் மீது எம்.புதுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.

Related Stories:

>