×

அண்ணா நினைவு நாளை முன்னிட்டு திமுக, அதிமுக தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை

விருதுநகர், பிப்.4: பேரறிஞர் அண்ணா நினைவு நாளை முன்னிட்டு விருதுநகர் பழைய பஸ்நிலையம் அருகே உள்ள அண்ணா சிலைக்கு திமுக தெற்கு மாவட்ட செயலாளர் சாத்தூர் ராமச்சந்திரன் தலைமையில் எம்எல்ஏ ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன், மாநில செயற்குழு சுப்பாராஜ், மதியழகன், நகர செயலாளர் தனபால், இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் கிருஷ்ணகுமார், மாணவரணி அமைப்பாளர் ராஜகுரு, நகர, ஒன்றிய மற்றும் பிற அணிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அதிமுகஅண்ணா நினைவு நாளை முன்னிட்டு விருதுநகர் நகராட்சி அலுவலகம் முன் உள்ள அண்ணா சிலைக்கு அதிமுக மாவட்ட அவைத் தலைவர் எஸ்.ஆர்.விஜயகுமரன் தலைமையில் அனைத்துலக எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர் கலாநிதி, நகர செயலாளர் நைனார் முகம்மது, ஒன்றிய செயலாளர் தர்மலிங்கம், கண்ணன், ராஜசேகர், ஒன்றிய தலைவர் சுமதி ராஜசேகர், ரோசல்பட்டி ஊராட்சி தலைவர் டாக்டர் தமிழரசி, கூரைக்குண்டு ஊராட்சி தலைவர் செல்வி மாரிக்கனி மற்றும் நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.

அருப்புக்கோட்டை
அண்ணா சிலைக்கு விருதுநகர் தெற்கு மாவட்டச் திமுக செயலாளர் சாத்தூர் ராமச்சந்தின் எம்எல்ஏ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் முன்னாள் ஒன்றிய சேர்மன் சுப்பாராஜ், இளைஞரணி கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர். ரமேஷ், ஒன்றிய சேர்மன் சசிகலா, துணைத்தலைவர் உதயசூரியன், முன்னாள் நகர் மன்றத்தலைவர் சிவப்பிரகாசம், நகர திமுக செயலாளர் மணி உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அருப்புக்கோட்டையில் அண்ணா நினைவு நாளை முன்னிட்டு நகர அதிமுக சார்பில் அமைதி ஊர்வலம் நடந்தது. விருதுநகர் கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். நகர செயலாளர் சக்தி பாண்டியன், ஒன்றிய செயலாளர்கள் வாசுதேவன்,சங்கரலிங்கம் முன்னிலை வகித்தனர். ஊர்வலம் அண்ணா சிலையில் முடிவடைந்தது. அதிமுகவினர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தனர். சொக்கலிங்கபுரம் மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் சமபந்தி நடந்தது.

ராஜபாளையம்
ராஜபாளையம் பழைய பஸ்நிலையம் அருகே உள்ள அண்ணா சிலைக்கு அதிமுகவினர் மாலை அணிவித்தனர். மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் வக்கீல் துரைமுருகேசன், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கிருஷ்ணராஜ், பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத் தலைவர் வனராஜ், மாவட்ட வர்த்தக அணி தலைவர் ராதாகிருஷ்ணன் ராஜா முன்னிலையில் அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.மதிமுக சார்பாக மாவட்ட பொருளாளர் விநாயகமூர்த்தி தலைமையில் நகர செயலாளர் ராஜா முன்னிலையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.சாத்தூர்சாத்தூரில் திமுக நகர செயலாளர் குருசாமி தலைமையில் வடக்குரத வீதியில் அண்ணா திருவுருவ படம் வைத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். சாத்தூர் முக்குராந்தல் பகுதியில் வைக்கப்பட்டிருந்த அண்ணாஉருவப்படத்திற்கு அதிமுக நகர செயலாளர் இளங்கோ மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

Tags : DMK ,AIADMK ,leaders ,Anna Memorial Day ,
× RELATED அதிமுக-தேமுதிக கூட்டணி வேட்பாளர்கள்...