×

தொடர்மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம் கேட்டு வத்திராயிருப்பில் ஆர்ப்பாட்டம்

வத்திராயிருப்பு, பிப்.4: வத்திராயிருப்பு தாலுகாவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த தொடர் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.வத்திராயிருப்பு தாலுகாவில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தொடர் மழையால் நெல் உள்ளிட்ட பயிர் வகைகள் சேதமடைந்தன. இதனால் நெல்லுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம், உளுந்து, பாசிப்பயறு உள்ளிட்ட பயிர்களுக்கு ரூ.15 ஆயிரம், கரும்பு, வாழைக்கு ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் வத்திராயிருப்பு முத்தலாம்மன் திடலில் ஆர்ப்பாட்டம்
நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய சங்க ஒன்றியக்குழு உறுப்பினர் ஜீவானந்தம் தலைமை வகித்தார். விவசாய சங்க மாவட்ட தலைவர் விஜயமுருகன், விவசாய சங்க தாலுகா செயலாளர் மணிக்குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார், நகர செயலாளர் பழனிச்சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Demonstration ,
× RELATED காங்.கட்சியினர் ஆர்ப்பாட்டம்