×

`தள்ளுனா தான் நகரும்’ காலாவதி டவுன் பஸ்களால் பயணிகள் அன்றாடம் அவதி போக்குவரத்து ஊழியர்கள் பரிதவிப்பு

விருதுநகர், பிப்.4: விருதுநகர்,சிவகாசி, சாத்தூர், காரியாபட்டி, அருப்புக்கோட்டை, திருவில்லிபுத்தூர், ராஜபாளையத்தில் இரண்டு என 8 அரசு போக்குவரத்து பணிமனைகள் உள்ளன. இவற்றில் 237 டவுன் பஸ்களும், 181 நீண்ட தூர பஸ்கள் என 418 பஸ்கள் இயக்கப்படுகின்றன.கடந்த 10 ஆண்டுகளில் நீண்ட தூர பஸ்கள் மட்டும் புதிதாக வாங்கப்பட்டுள்ளன. 10 ஆண்டுகளுக்கு முன் வாங்கிய பஸ்களே டவுன் பஸ்களே இன்று வரை இயங்குகின்றன. அனைத்து டவுன் பஸ்களும் அனுமதிக்கப்பட்ட கால அளவு, பயணத்தூரத்தை கடந்து இயங்குகின்றன. இதனால் காலவதியான பஸ்களை இயக்குவதால் பல டவுன் பஸ்கள் ஓட்டை, உடைசலாக காட்சி தருகின்றன. 10 ஆண்டுகளில் சில முறை பஸ்கட்டணம் அரசு உத்தரவால் உயர்த்தப்பட்டும், பல முறை உத்தரவின்றியும் உயர்ந்துள்ளன. கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையிலும் கிராமங்களுக்கு இயக்கப்படும் பஸ்களில் பெரும்பான்மையானவை ஓட்டை, உடைசலாகவே உள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் இயக்கப்படும் பல டவுன் பஸ்களின் இருக்கைகள் உடைந்த நிலையிலும், பக்கவாட்டு கண்ணாடிகள் இன்றியும் இயங்குகின்றன. மேற்கூரைகள், கண்ணாடிகள் ஓட்டையாக இருப்பதால் வெயில் அடித்தால் பயணிகள் மீது வெயில் விழுவதும், மழை பெய்தால் மழைநீர் ஒழுகுவதும் தொடர் கதையாகி வருகிறது. இந்நிலையில் கடந்த ஒருமாதமாக டவுன் பஸ்கள் நடுரோட்டிலும், பஸ் நிலையங்க ளிலும் திடீரென நின்று கொள்கிறது. ஸ்டாட் செய்வதற்கு பயணிகளும், ஊழியர்களும் பின்னால் `தள்ளி’ ஸ்டாட் செய்ய வேண்டிய நிலை தொடர்கதையாகிறது.இதனால் பஸ்சை ஓட்டுவதா இல்லை தள்ளியே கொண்டு செல்வதா என ஓட்டுநர்களும், டிக்கெட் எடுத்த பஸ் ஊர் போய் சேருமா என பயணிகளும் ஒருவரை ஒருவர் கேள்வி கேட்டு வருகின்றனர்.

Tags : Talluna Than Nakarum ,
× RELATED `தள்ளுனா தான் நகரும்’ காலாவதி டவுன்...