×

ஒருங்கிணைந்த மருத்துவ முறையினை எதிர்த்து கற்பக விநாயகா மருத்துவ கல்லூரியில் டாக்டர்கள் உண்ணாவிரதம்

மதுராந்தகம்: ஒருங்கிணைந்த மருத்துவ முறையை எதிர்த்து, கற்பக விநாயகா மருத்துவ கல்லூரி டாக்டர்கள், பயிற்சி டாக்டர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநிலம் முழுவதும் ஒருங்கிணைந்த மருத்துவ முறையை எதிர்த்து, டாக்டர்கள் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையொட்டி, செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே சின்னகொளம்பாக்கத்தில் உள்ள கற்பக விநாயகா மருத்துவ கல்லூரி  வளாகத்தில், இந்திய மருத்துவர்கள் கூட்டமைப்பின் சார்பில், ஆயுர்வேதம் மற்றும் ஆங்கில மருத்துவத்தை இணைந்து கொண்டு வந்துள்ள, ஒருங்கிணைப்பு மருத்துவ முறையினை எதிர்த்து டாக்டர்கள், பயிற்சி டாக்டர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.

இதில், இந்திய மருத்துவர்கள் கூட்டமைப்பின் தேசிய தலைவர் ஜா.ஜெயபால் தலைமை தாங்கினார். மாநில தலைவர் ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். கற்பக விநாயகா மருத்துவ கல்லூரி நிர்வாக இயக்குனர் அண்ணாமலை ரகுபதி வரவேற்றார். கூட்டமைப்பின் தேசிய செயலாளர் அன்பரசு, மாநில செயலாளர் ரவிக்குமார், முன்னாள் தேசிய தலைவர்கள் அருள்ராஜ், விஜயகுமார், தேசிய ஒருங்கிணைப்பாளர் பிரகாசம், முன்னாள் மாநில செயலாளர் முத்துராஜ், இந்திய மருத்துவர்கள் கூட்டமைப்பின் மதுராந்தகம் கிளை நிர்வாகி கலியபெருமாள் ஆகியோர் முன்னிலையில் டாக்டர்கள், பயிற்சி டாக்டர்கள் 1000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

Tags : Doctors ,Karbhaka Vinayaka Medical College ,
× RELATED நாகர்கோவில் அருகே லெமூர் பீச்சில்...