×

திமுக சார்பில் அண்ணா சிலைக்கு மாலை அணிவிப்பு

சிவகங்கை/காரைக்குடி, பிப்.4: சிவகங்கை மாவட்டம் முழுவதும் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. சிவகங்கை நகர் திமுக சார்பில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு நகர செயலாளர் துரைஆனந்த் தலைமை வகித்தார். மாவட்ட துணை செயலாளர் மணிமுத்து, மாநில பொதுக்குழு உறுப்பினர் பிடிஆர்.முத்து முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர்(வடக்கு) முத்துராமலிங்கம், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் பவானிகணேசன், இளைஞரணி அமைப்பாளர் அயூப்கான், வட்ட செயலாளர்கள் கண்மணி, ராஜபாண்டியன், சேகர், பாண்டியராஜன், நகர் துணை செயலாளர் சரவணன், மாவட்ட ஆதி திராவிடர் நல அணி சிங்கமுத்து, தகவல் தொழில்நுட்ப அணி காசிசிவராமன், சதீஸ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர். திருப்புவனத்தில் ஒன்றிய திமுக சார்பில் மாவட்ட துணைச் செயலாளர் சேங்கைமாறன் தலைமையில் நினைவு தின ஊர்வலம் நடந்தது. பின்னர் அண்ணாவின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் திமுக ஒன்றிய செயலாளர்கள் வசந்திசேங்கைமாறன், கடம்பசாமி, நகர் செயலாளர் நாகூர்கனி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

காரைக்குடி: காரைக்குடியில் திமுக நகர செயலாளர் குணசேகரன் வரவேற்றார். முன்னாள் அமைச்சர் தென்னவன் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. முன்னாள் எம்எல்ஏ சுப.துரைராஜ், முன்னாள் நகர்மன்ற தலைவர் முத்துத்துரை, இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் நாகனிசெந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுக்குழு உறுப்பினர் அசோகன், மாவட்ட திமுக நாதன், சட்டபாதுகாப்பு குழு வழக்கறிஞர் பால சுப்பிரமணியன், வர்த்தக அணி கென்னடி, அபி, அட்சயாமணியன், நகர திமுக காரைசுரேஷ், தொமுச கவுரவத்தலைவர் குளவயிரவன், சிறுபான்மைபிரிவு மைக்கேல், முன்னாள் கவுன்சிலர்கள் குளசொக்கு, சன்சுப்பையா, அன்பழகன், பழனி, வைரவன்,தமிழ்மணி குணசேகரன்,  மாவட்ட பிரதிநிதி சேவியர், புதுவயல் சுப்பிரமணியன், நகர வர்த்தக அணி குருசாமி, நகர இளைஞரணி அமைப்பாளர் மூர்த்தி, மாணவரணி அசரப், தினகரன், ஜெபதுரை, குட்டி, ராஜா, பாண்டி, ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். நகரதுணை செயலாளர் கண்ணன் நன்றி கூறினார்.

Tags : Evening procession ,Anna ,DMK ,
× RELATED பதிவாளர் நியமனம் தொடர்பாக அண்ணா...