×

மார்த்தாண்டம் அருகே நண்பனை கத்தியால் குத்திய வாலிபர் கைது

மார்த்தாண்டம், பிப்.13: மார்த்தாண்டம் அருகே காப்புகாடு பகுதியை சேர்ந்தவர் ரஜின் (24) கூலி தொழிலாளி. அவரது நண்பர் முஞ்சிறை பகுதியை சேர்ந்த எட்வின் கிளாடிஸ் (39). பெயிண்டர். சம்பவத்தன்று 2 பேரும் மது அருந்த முடிவு செய்துள்ளனர். அதன்படி அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரி அருகே சென்றுள்ளனர். அப்போது 2 பேருக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் கைகலப்பாக மாறியது. இதில் ஆத்திரமடைந்த எட்வின் கிளாடிஸ் மறைத்து வைத்திருந்த சிறிய கத்தியை எடுத்து ரஜினின் வயிற்றில் குத்தினார். படுகாயமடைந்த அவர் சத்தம் போட்டுள்ளார். உடனே அருகில் இருந்தவர்கள் விரைந்து வந்துள்ளனர். அப்போது பக்கத்தில் வராதீர்கள் உங்களையும் குத்தி கொன்று விடுவேன் என்று கொலை மிரட்டல் விடுத்துள்ளார். பின்னர் அங்கிருந்து எட்வின் கிளாடிஸ் தப்பி சென்றார். இது குறித்து ரஜின் மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, எட்வின் கிளாடிசை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags : Marthandam ,Rajin ,Kapukadu ,Edwin Gladys ,Munjirai ,
× RELATED வேலூர் சத்துவாச்சாரியில் துணிகரம்;...