×

சட்ட திருத்த நகல் எரிப்பு போராட்டம் தொழிற்சங்கத்தினர் கைது

மதுரை, பிப்.4: மதுரையில் தொழிலாளர்களை பாதிக்கும் சட்ட திருத்தத்திற்கான நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட பல்வேறு தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள் உள்ளிட்ட 60 பேரை போலீசார் கைது செய்தனர். வேளாண் திருத்த சட்ட மசோதா, மின்சார திருத்த சட்ட மசோதா, தொழிலாளர் நலம் சார்ந்த 44 சட்டங்களை 4 சட்டங்களாக மாற்றியது உள்ளிட்டவைகளை திரும்பப்பெறக்கோரி சட்ட திருத்தங்களுக்கான நகல் எரிப்பு போராட்டம் மதுரையில் நேற்று நடந்தது. மதுரை ஆர்எம்எஸ் ரோட்டில் நடந்த போராட்டத்திற்கு ஏஐடியுசி மாவட்ட பொதுச் செயலாளர் நந்தாசிங் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்ட செயலாளர் தெய்வராஜ் முன்னிலை வகித்தார். தலைவர் கணேசன், ஹெச்எம்ஸ் சங்க நிர்வாகி பாதர் வெள்ளை, எல்பிஎப் போக்குவரத்து தொழிலாளர் சங்க நிர்வாகி அப்போன்ஸ், எம்எல்எப் மாநில நிர்வாகி மகபூப்ஜான் மற்றும் ஐஎன்டியுசி, டிடிஎஸ்எப், ஏஏஎல்எப், டிடபிள்யு உள்ளிட்ட பல்வேறு தொழிற் சங்கங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நகல் எரிப்பு போராட்டத்தில் கலந்து கொண்டவர்களில் 60 பேரை திலகர்திடல் போலீசார் கைது செய்தனர்.

திருப்பரங்குன்றம் மதுரை திருப்பரங்குன்றம் பஸ்நிலையம் அருகில் தொழிலாளர் விரோத சட்டதிருத்த தொகுப்பு நகல் எரிப்பு போராட்டம் சிஐடியு சார்பில் நடைபெற்றது. சிஐடியு புறநகர் மாவட்டச் செயலாளர் அரவிந்தன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் கண்ணன், கெளரி, பொன்கிருஷ்ணன், பிச்சைராஜன் உட்பட 50க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர். சட்ட நகலை எரிக்க முயன்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

Tags : protest ,unions ,
× RELATED தமிழ்நாட்டின் அனைத்து...