×

திருமங்கலம் தொகுதியில் மேலும் 112 பூத்துகள்

திருமங்கலம், பிப்.4: திருமங்கலம் சட்டமன்ற தொகுதியில் கடந்த முறையை காட்டிலும் இந்த முறை மேலும் கூடுதலாக 112 பூத்துகள் அமைக்கப்பட உள்ளன. திருமங்கலம் சட்டமன்ற தொகுதியில் கடந்த சட்டமன்ற தேர்தலில் போது 310 பூத்துகள் அமைக்கப்பட்டிருந்தன. திருமங்கலம், தாலுகா மற்றும் பேரையூர் தாலுகாவில் ஒரு பகுதி இணைந்து இந்த பூத்துகள் அமைக்கப்பட்டிருந்தன. ஆனால் இந்த சட்டமன்ற தேர்தலில் புதியதாக கள்ளிக்குடி தாலுகா அமைக்கப்பட்டுள்ளதால் திருமங்கலம், கள்ளிக்குடி மற்றும் பேரையூர் தாலுகாவில் டி.கல்லுப்பட்டி ஒன்றியம், பேரையூர், கல்லுப்பட்டி பேரூராட்சிகள் அடங்கிய பகுதிகள் தொகுதியில் வருகிறது.தற்போது கொரோனாவை காரணம் காட்டி ஆயிரம் வாக்காளர்கள் எண்ணிக்கைக்கு மேல் இருக்கும் பூத்துகளை இரண்டாக பிரிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்த தொகுதியில் 112 பூத்துகளில் ஆயிரம் வாக்காளர்களுக்கு மேல் உள்ளதால் அவை இரண்டாக பிரிக்கப்பட்டு மேலும் கூடுதலாக 112 பூத்துகள் அமைக்கப்பட உள்ளதாக வருவாய்த்துறையினர் தெரிவித்தனர். தற்போது ஆயிரம் வாக்காளர்களுக்கு மேல் உள்ள பூத்துகள் அடையாளம் காணப்பட்டு அவற்றை பிரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

Tags : Thirumangalam ,constituency ,
× RELATED மதுரை திருமங்கலம் அருகே விபத்தில் 4 பேர் பலி