×

கள்ளிக்குடியிலும் அம்மா சிமெண்ட் தட்டுப்பாடு பயனாளிகள் அவதி

திருமங்கலம், பிப்.4: தமிழகத்தில் ஏழை, எளிய மக்கள் வீடுகட்டுவதற்கு அரசு சார்பில் குறைந்த விலையில் அம்மா சிமெண்ட் விற்பனை துவக்கப்பட்டது. தனியார் சிமெண்ட் ஒரு மூட்டை 450 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் போது, அம்மாசிமெண்ட் 190 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. பசுமைவீடு திட்டம், பிரதமரின் வீடுதிட்டம் உள்ளிட்ட திட்டங்களுக்கு இந்த சிமெண்ட் பெருமளவிற்கு பயன்படுத்தப்பட்ட வந்தது.
இந்த நிலையில் தற்போது அம்மா சிமெண்ட் விலை சற்று கூட்டப்பட்டு ஒரு மூட்டை 216 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. 50 மூட்டைகளுக்கு 10 ஆயிரத்து 800 ரூபாய் டிடி எடுத்து குடோனில் கொடுத்தால் ஒரு வாரத்திற்குள் கேட்ட பயனாளிக்கு அம்மா சிமெண்ட் வழங்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் கொரோனாவை காரணம் காட்டி கடந்த 10 மாதத்திற்கு மேலாக திருமங்கலம் ஒன்றியத்தில் அம்மா சிமெண்ட் விநியோகம் முற்றிலும் தடைபட்டது. அதே நேரத்தில் பக்கத்திலுள்ள ஒன்றியங்களான கள்ளிக்குடி, செல்லம்பட்டி பகுதிகளில் அம்மா சிமெண்ட் கிடைத்து வந்தது. இந்த நிலையில் கள்ளிக்குடி ஒன்றியத்திலும் கடந்த 20 தினங்களாக அம்மா சிமெண்ட்டிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் வீடுகட்டும் பயனாளிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். கட்டுமானப் பணிகளும் நின்றுள்ளன.இதுகுறித்து அம்மா சிமெண்ட் அதிகாரிகளிடம் கேட்ட போது, ``விலை உயர்வு காரணமாக சிமெண்ட் வருவது காலதாமதமாகியுள்ளது. இன்னும் ஒரு சில நாள்களில் அம்மா சிமெண்ட் கள்ளிக்குடி பகுதிகளில் கிடைக்கும்’’ என்றனர்.

Tags :
× RELATED திருச்சி மத்திய சிறை நுழைவாயிலில் ரூ1.09...