×

அரிசி, பருப்பு, முட்டை என்னாச்சு பள்ளியை முற்றுகையிட்டு பெற்றோர்கள் வாக்குவாதம் திண்டுக்கல்லில் பரபரப்பு

திண்டுக்கல், பிப். 4: திண்டுக்கல் பாரதிபுரம் சந்தைரோட்டில் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 267 மாணவ, மாணவிகளுக்கு சத்துணவு வழங்கப்பட்டு வருகிறது. கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு உள்ளதால், சத்துணவு சாப்பிடும் ஒவ்வொரு குழந்தைக்கும் மாதம் 3 கிலோ 100 கிராம் அரிசி, ஒரு கிலோ 200 கிராம் பருப்பு, 10 முட்டை வழங்கப்படும் எனவும், இவற்றை அந்தந்த பள்ளியில் உள்ள சத்துணவு அமைப்பாளர்களிடம் பெற்றோர்கள் பெற்று கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்தது. ஆனால் இந்த பள்ளியில் சத்துணவு அமைப்பாளர் மாதந்தோறும் குழந்தைகளுக்கு முறையாக அரிசி, பருப்பு, முட்டை வழங்குவது இல்லை எனக்கூறி பெற்றோர்கள் பள்ளி தலைமையாசிரியர், மாவட்ட கலெக்டரிடம் புகார் தெரிவித்தனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

Tags : Rice ,eggs siege school ,parents ,Ennachu ,Dindigul ,
× RELATED முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் மோடி: பழ.நெடுமாறன்