×

114 ரபேல் போர் விமானங்கள் கொள்முதல் செய்ய ஒன்றிய அமைச்சகம் ஒப்புதல்

டெல்லி: பாதுகாப்புத் துறையைப் பலப்படுத்தும் வகையில்ரூ.3.25 லட்சம் கோடி செலவில் 114 ரபேல் விமானங்களை வாங்க ராஜ்நாத் சிங் தலைமையிலான பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது.

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் வரும் 17-ம் தேதி இந்தியா வர இருக்கிறார். அவரது வருகையின்போது இது தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. இதை முன்னிட்டு, இந்திய விமானப் படைக்கு 114 ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கான திட்டத்துக்கு, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் இன்று (பிப்.12) ஒப்புதல் வழங்கி உள்ளது.

ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு பாதுகாப்பு அச்சுறுத்தல் அதிரித்துள்ளதை அடுத்து, இந்திய விமானப் படையின் வலிமையை அதிகரிக்க ரபேல் போர் விமானங்களின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் என்று இந்திய விமானப் படை கோரி வந்தது. இதன்மூலம், அதன் கோரிக்கை பூர்த்தி செய்யப்பட இருக்கிறது.

Tags : Union Ministry ,Delhi ,Rajnath Singh ,Defence Procurement Council ,President ,Emmanuel Macron ,India ,
× RELATED புழலில் ரூ.14 கோடியில் மாநகராட்சி பள்ளி;...