தூத்துக்குடியில் நாளை மீனவர் குறைதீர்க்கும் கூட்டம்

தூத்துக்குடி, பிப்.4: தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் நாளை (5ம் தேதி) மீனவர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும் என்று கலெக்டர் செந்தில்ராஜ் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:  தூத்துக்குடி மாவட்ட மீனவர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் எனது தலைமையில் நாளை (5ம் தேதி) பகல் 11 மணிக்கு கலெக்டர் அலுவலகத்திலுள்ள முத்து அரங்கத்தில் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் மீனவர் சமுதாயத்தை சார்ந்த பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள், மீனவர் கூட்டுறவு சங்க தலைவர்கள், மீனவ கிராமங்களை சேர்ந்த ஊர்த்தலைவர்கள், பெரியவர்கள் கலந்துகொண்டு தங்களின் கோரிக்கைள் குறித்து விரிவாக எடுத்துரைத்திடவேண்டும். மீனவ மக்களின் கோரிக்கை தொடர்பான மனுக்கள் மற்றும் கருத்துக்கள் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் அங்கேயே பெறப்பட்டு அதனை நிறைவேற்றுவதற்கான உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். எனவே, இந்த கூட்டத்தில் மீனவர்கள் முககவசம் அணிந்தும், சமூக இடைவளியை பின்பற்றியும், அரசின் வழிகாட்டும் நெறிமுறைகளை பின்பற்றியும் பங்கேற்றிடவேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories:

>