எட்டயபுரம் அருகே வீடு புகுந்து 5 பவுன் நகை திருட்டு

எட்டயபுரம், பிப்.4: எட்டயபுரம் அருகே மேலஈராலை சேர்ந்த சரவணன் மனைவி வெள்ளைத்தாய் (32). இவர் கடந்த ஜன.24ம் தேதி தான் அணிந்திருந்த 5 பவுன் நகையை வீட்டில் கழற்றி வைத்து விட்டு ஊரில் உள்ள குளத்தில் குளிப்பதற்காக சென்றுள்ளார். குளித்து விட்டு வீட்டில் வந்து பார்த்தபோது நகையை காணவில்லை. வீட்டில் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.  யாரோ மர்மநபர் வீட்டை திறந்து நகையை திருடிவிட்டு மீண்டும் பூட்டி விட்டு சென்றுவிட்டதாக எட்டயபுரம் போலீசில் வெள்ளைத்தாய் புகார் அளித்தார். இது குறித்து எட்டயபுரம் எஸ்ஐ பொன்ராஜ் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்.

Related Stories: