பாபநாசம் கோயில் நிலங்கள் மீட்பு

வி.கே.புரம், பிப்.4: மதுரை ஐகோர்ட் உத்தரவுபடியும், அறநிலையத்துறை இணை ஆணையாளர் பரஞ்சோதி அறிவுறுத்தலின்படியும் பாபநாசம் கோயிலுக்குச் சொந்தமான நிலங்களை ஆக்கிரமிப்பு    செய்தவர்களிடமிருந்து நிலத்தை கைப்பற்றும் பொருட்டு நேற்று நெல்லை அற நிலையத்துறை ஆய்வாளர் கண்ணன் தலைமையில் அம்பை வருவாய்துறையினர், வி.கே.புரம் காவல் துறையினர் முன்னிலையில் அறநிலையத்துறையினர் நெல்லை மாவட்டத்திலுள்ள பாபநாசம் கோயிலுக்குச் சொந்தமான 4ஆக்கிரமிப்பு நிலங்கள் ஒரு ஏக்கர் 30சென்ட் கண்டறியப்பட்டு அறநிலையத்துறை சார்பில் போர்டு வைக்கப்பட்டன.  இதில் பாபநாசம் கோயில் நிர்வாகி அதிகாரி ஜெகநாதன், சொரிமுத்தய்யனார் கோயில் நிர்வாக அதிகாரி வெங்கடேஸ்வரன், செயல் அலுவலர்கள் கிருஷ்ணவேணி, முருகன், உட்பட பலர் உடனிருந்தனர்.

Related Stories:

>