மரத்தில் பைக் மோதி கல்லூரி மாணவர் பலி

திருவேங்கடம், பிப். 4: கடையநல்லூர் அம்பேத்கர் தெருவைச் சேர்ந்த கணேசன் மகன் ராமர்(22). இவர் கோவையில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வந்தார்.  கொரோனா தொற்று பரவலால் கல்லூரி திறக்காததால் ஊரில் இருந்து வந்தார். நேற்று முன்தினம் ராமர், பைக்கில் குருவிகுளத்தில் உள்ள பெரியம்மா வீட்டிற்கு சென்றார். குருவிகுளம் செல்லும் வழியில் நயினாம்பட்டி விலக்கில் வளைவில் திரும்பும் போது எதிர்பாராத விதமாக பைக் ரோட்டின் அருகேயுள்ள மரத்தில் மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த அவரை சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து குருவி குளம் எஸ்ஐ செல்வராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்

Related Stories:

>