×

52வது நினைவு தினத்தை முன்னிட்டு அண்ணா சிலைக்கு திமுக, அதிமுகவினர் மரியாதை


தென்காசி, பிப்.4: முன்னாள் முதல்வர் அண்ணாவின் 52வது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது சிலைக்கு திமுக, அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தென்காசியில் அண்ணாவின் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது படத்திற்கு நகர திமுக சார்பில்  மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நகர செயலாளர் சாதிர் தலைமை வகித்தார். முன்னாள் நகர்மன்ற தலைவர் கோமதிநாயகம், மாவட்ட நெசவாளரணி அமைப்பாளர் சுப்பையா, மாணவரணி துணை அமைப்பாளர் வக்கீல் ராஜா, மருத்துவரணி துணை அமைப்பாளர் டாக்டர் மாரிமுத்து, வழக்கறிஞரணி  ரகுமான் சாதத், நகர நிர்வாகிகள் நடராஜன், பால்ராஜ், கலை பால்துரை, மாவட்ட பிரதிநிதி பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தனர். பேச்சாளர் இஸ்மாயில் உட்பட பலர் பங்கேற்றனர். குற்றாலத்தில் அண்ணா சிலைக்கு திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் குத்துக்கல்வலசை அழகுசுந்தரம் தலைமையில் மாலை அணிவித்தனர். பேரூர் செயலாளர் மந்திரம், ஒன்றிய பொறுப்பு குழு உறுப்பினர்கள் ராமகிருஷ்ணன், இலஞ்சி ரவி, குற்றாலம் குட்டி, கனகராஜ் முத்துபாண்டியன், காசி கிருஷ்ணன், மாவட்ட அணி துணை அமைப்பாளர்கள் சண்முகநாதன், சுப்பிரமணியன், முத்துவேல், பேச்சிமுத்து, சிவனு பாண்டியன், முன்னாள் அறங்காவலர் வீரபாண்டியன், பேரூர் செயலாளர் முத்தையா உட்பட  பங்கேற்றனர்.

மேலகரத்தில் பேரூர் அதிமுக சார்பில் அண்ணா படத்திற்கு பேரூர் செயலாளர் வக்கீல் கார்த்திக்குமார் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மாவட்ட இலக்கிய அணி செயலாளர் நெல்லை முகிலன், மாவட்ட பிரதிநிதி நாராயணன், அவைத்தலைவர் முருகசாமி, தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் முருகன், அண்ணா தொழிற்சங்கம் பழனி, தில்லை நடராஜன், வீரபாண்டியன், இளைஞர் பாசறை பரத், ரவி, ஆறுமுகம், வார்டு செயலாளர்கள் வெங்கடகிருஷ்ணன், பழனி, செந்தில்வேல்  உட்பட பலர் பங்கேற்றனர்.  செங்கோட்டை: அண்ணாவின் நினைவுநாளை முன்னிட்டு தென்காசி வடக்கு மாவட்டச் செயலாளர் கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா அறிவுறுத்தலின்பேரில் செங்கோட்டையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.  நிகழ்ச்சியில் நகர அவைத்தலைவர் தங்கவேலு, பொருளாளர் ராஜா, துணை செயலாளர் பூசைராஜ், முன்னாள் நகர்மன்ற துணைத்தலைவர் கணேசன். மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணைத்தலைவர் ஜாகீர்உசேன், இணைச்செயலாளர் பரமசிவன், மாவட்ட பிரதிநிதிகள் லட்சுமணன், மைதீன்பிச்சை, வர்த்தக அணி துணைத்தலைவர் மேலூர்மணி, மீனவரணி செயலாளர் மீன்ஆறுமுகம், வடகரை ராமர் மற்றும் நகர, ஒன்றிய நிர்வாகிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.

செங்கோட்டையில் திமுக மாவட்ட மாணவரணி அமைப்பாளர் வக்கீல் வெங்கடேசன் தலைமையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இலத்தூர் ஆறுமுகச்சாமி, பொறுப்புக்குழு உறுப்பினர் பேபி ரஜப்பாத்திமா, மகளிரணி துணை அமைப்பாளர் மேரி அந்தோனிராஜ், விவசாய அணி துணை அமைப்பாளர் காதர் அண்ணாவி, நகர துணை செயலாளர் பாஞ்ச் பீர்முகம்மது, தொமுச மணி, முன்னாள் கவுன்சிலர்கள் ரவீந்திரன், பேச்சாளர் குற்றாலிங்கம், ஷாலிக் உள்பட பலர் பங்கேற்றனர். செங்கோட்டையில் அண்ணா சிலைக்கு திமுக மாநில வர்த்தகர்அணி துணைத்தலைவர் அய்யாத்துரைப்பாண்டியன் தலைமையில் நகர செயலாளர் ரஹீம், கலைஞர் தமிழ்ச்சங்க நிறுவனர் ஆபத்துகாத்தான் முன்னிலையில் மரியாதை செலுத்தினர்.பொதுக்குழு உறுப்பினர்கள் லிங்கராஜ்,காசிதர்மம் துரை, நகர அவைத்தலைவர் காளி, பொருளாளர் ஜெயராஜ், துணைச் செயலாளர்கள் குட்டிராஜா, மாவட்ட துணை செயலாளர் பேபி, ஒன்றிய செயலாளர்கள் ரவிசங்கர், ராமையா என்ற துரை, மாவட்ட பிரதிநிதி கல்யாணி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் ஹக்கீம், ராஜா இசக்கிதுரை, ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் லியோன், இளைஞரணி துணை அமைப்பாளர்கள் இசக்கித்துரை, சுப்புராஜ், புதூர் பேரூர் இளைஞரணி அமைப்பாளர் சந்தோஷ், மணிகண்டன், உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற மாவட்ட தலைவர் ஈஸ்வரன், செங்கோட்டை மன்ற தலைவர் மனோஜ், செயலாளர் மணிகண்டன், கடையநல்லூர் ஒன்றிய செயலாளர் காளிராஜ், அப்துல்வகாப், சுரேஷ், வேலுமணி, தில்லை பேச்சிமுத்து உட்பட பலர் பங்கேற்றனர்.

திசையன்விளை: ராதாபுரம் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் திசையன்விளையில் அண்ணா நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. அலங்கரிக்கப்பட்ட அண்ணா படத்திற்கு ஒன்றிய செயலாளர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஸ், நகர செயலாளர் பேராசிரியர் ஜாண்கென்னடி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.  நிகழ்ச்சியில் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் அனிதா பிரின்ஸ், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் அமெச்சியார், பேரூர் பொறுப்புக்குழு உறுப்பினர்கள் நடராஜன், சவுந்தர், பரமசிவன், ரவி, ரெங்கசாமி, இளைஞரணி அமைப்பாளர் நெல்சன், துணை அமைப்பாளர் விமலன், ஒன்றிய பிரதிநிதி நசுருதீன், வக்கீல் சுகந்தி, கனிஷ்கர், எட்வின், சில்வெஸ்டர், மணிலி மோகன், பால்ராஜ், ராஜா, மைக்கில், செந்தில்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

வீரவநல்லூர்: வீரவநல்லூரில் அண்ணா நினைவு நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் மாநில தொண்டரணி துணை அமைப்பாளர் ஆவின் ஆறுமுகம், கணேஷ்குமார் ஆதித்தன், ஒன்றிய செயலாளர்கள் சேரன்மகாதேவி கிழக்கு முத்துப்பாண்டி பிரபு, மேற்கு ராஜகோபால், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் செல்லத்துரை, மாவட்ட வர்த்தகஅணி அமைப்பாளர் பண்ணை முருகன், விவசாய தொழிலாளரணி அமைப்பாளர் மாஞ்சோலை மைக்கேல், துணை அமைப்பாளர்கள் இளைஞரணி வேல்முருகன், வர்த்தகஅணி சுடலை, விவசாய அணி சோழமுடிராஜன், பால்மாரி, பேரூர் செயலாளர் அப்துல், தகவல் தொழில்நுட்ப அணி அண்ணாதுரை, நிர்வாகிகள் வானுமாமலை, கார்த்திகேயன், தாமரைச்செல்வி உட்பட பலர் பங்கேற்றனர்.

சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் பஸ்நிலையம் அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அண்ணா படத்திற்கு முன்னாள் அமைச்சர் தங்கவேலு தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.  இதில் மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் சுப்பையா, பொறுப்புக்குழு உறுப்பினர்கள் வக்கீல் சண்முகையா சோமசெல்வபாண்டியன், வாழைக்காய் துரைபாண்டியன், மகளிர் தொண்டரணி அமைப்பாளர் புனிதா, வர்த்தகஅணி துணை அமைப்பாளர்கள் முனியசாமி, அண்ணாவியப்பன், மாவட்ட பிரதிநிதி கணேசன், சட்ட பாதுகாப்பு குழு உறுப்பினர் வக்கீல் ஜெயக்குமார், நிர்வாகிகள் குட்டிசண்முகம், யோசேப், தகவல் தொழில்நுட்ப பிரிவு குமார், ராஜ், நகர இளைஞரணி பிரகாஷ், சரவணன், விவசாய தொழிலாளரணி அஜய்மகேஷ்குமார், மாணவரணி அப்பாஸ், சதா சிவம், பூரணம், ஆறுமுகம், யாசின் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். சுரண்டை: சுரண்டையில் நடந்த அண்ணா நினைவுநாள் நிகழ்ச்சிக்கு நகரச் செயலாளர் ஜெயபாலன் தலைமை வகித்தார். மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் ஆலடி எழில்வாணன் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தார்.

நிகழ்ச்சியில் சுப்பிரமணியன், ஆறுமுகசாமி, சங்கரநயினார், அன்பழகன், ஜேசுராஜன், ஜேம்ஸ், கோமதிநாயகம், மெரிட்டன், சார்லஸ் தினகரன், சசிகுமார், துரை,வேல்சாமி, தங்கச்சாமி பாண்டியன் உள்பட பங்கேற்றனர்.
வள்ளியூர்:  சமூகரெங்கபுரம் பஸ்நிலையத்தில் அண்ணா  சிலைக்கு ராதாபுரம் மேற்கு ஒன்றிய  செயலாளர் ஜோசப்பெல்சி தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்தனர். இதில் தொண்டரணி அமைப்பாளர் முருகன், மாவட்ட துணை அமைப்பாளர்கள் வர்த்தக அணி முரளி, இலக்கிய அணி சுப்பையா,  ஆதிதிராவிட நலக்குழு  மூர்த்தி, ஒன்றிய பொறுப்புக்குழு உறுப்பினர் செங்குட்டுவன், கலை இலக்கிய பாசறை அமைப்பாளர்கள் இசக்கிபாபு, கருணைராஜ்,  முருகேசன், ஐயாத்துரை, நம்பி, வன்னியதாஸ், வேலு, கிளை செயலாளர்கள் பரமேஸ்வரபுரம்  கல்கண்டு, தெற்கு கள்ளிகுளம் செயலாளர் சார்லஸ் பெஸ்கி,  துணைச்செயலாளர் டெர்மின்ராஜா, கூடங்குளம் துரை,  அகாஷ் மிக்கேல் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். வி.கே.புரம் :  வி.கே.புரத்தில் அதிமுக சார்பின் அண்ணா நினைவுநாள் அனுசரிக்கப்பட்டது. நகர செயலாளர் கண்ணன் தலைமை வகித்தார். மாவட்ட கலை இலக்கிய பிரிவு செயலாளர் மீனாட்சிசுந்தரம், நகர இணை செயலாளர் பத்மா முன்னிலை வகித்தனர்.

இதில் முன்னாள் அமைச்சர் இசக்கிசுப்பையா அண்ணா படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் வக்கீல் சுரேஷ், கோபிநாத், முன்னாள் கவுன்சிலர் ஆணையப்பன், கிட்டு, கல்யாணசுந்தரம், குஞ்சுபாலு, முனியசாமி, பட்டுராஜன் உட்பட பலர் பங்கேற்றனர். முருகையாபாண்டியன் எம்எல்ஏவின் அறிவுறுத்தலின்படி அம்பை ஒன்றிய அதிமுக சார்பில் சிவந்திபுரத்தில் அண்ணா நினைவுநாள் அனுசரிக்கப்பட்டது. அம்பை ஒன்றிய செயலாளர் விஜயபாலாஜி, அண்ணா படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதில் துணைச்செயலாளர் பிராங்கிளின், மாணவரணி செயலாளர் முத்துராமன், மகளிரணி செயலாளர் கமலி, அரசு வக்கீல் கோமதிசங்கர், வக்கீல் ராஜசேகரன், இளைஞரணி செயலாளர் சண்மு உட்பட பலர் பங்கேற்றனர்.

Tags : DMK ,AIADMK ,occasion ,Anna ,Memorial Day ,
× RELATED அவதூறு பேச்சுக்காக எடப்பாடி பழனிசாமி...