×

நாங்கள் செய்த சாதனைகளை, அடுத்து வரக்கூடிய ஆட்சியில் நாங்களே முறியடிப்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி

சென்னை : தமிழ்நாடு முதலீடுகள் செயலாக்க மாநாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை கிண்டியில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்று வருகிறது. இதில் சிறப்புரை ஆற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “திராவிட மாடல் என்றால் வளர்ச்சிக்கான மாடல்; திராவிட மாடல் என்றால் ரிசல்ட் கொடுக்கக்கூடிய மாடல்; திராவிட மாடல் என்றால் மக்கள் நன்மைக்காக இருக்கக்கூடிய மாடல். இதையெல்லாம் உலகுக்கு எடுத்துச்சொல்லக்கூடிய மாநாடுதான் இந்த ‘தமிழ்நாடு முதலீடுகள் செயலாக்க மாநாடு’. தமிழ்நாட்டின் வளர்ச்சியை பொறுத்துக் கொள்ள முடியாத ஒரு சிலருக்கு, எங்களின் செயலின் மூலம் பதில் சொல்லும் மாநாடுதான் இந்த செயலாக்க மாநாடு. தொழில்துறை அமைச்சர் இங்கு சொன்ன ஒவ்வொரு டேட்டாவும் எங்களை விமர்சித்தவர்களுக்கான பதில். அவர் சொன்ன ஒவ்வொரு நம்பரும், எங்கள் அணி கடந்த 5 ஆண்டாக செய்த உழைப்புக்கான நம்பர்.

தமிழ்நாடு தொழில்துறையில் நாங்கள் செய்துள்ள ரெக்கார்ட்-ஐ, அடுத்து நாங்கள் வந்துதான் முந்தப் போறோம். அடித்துச் சொல்கிறேன், இது உறுதி. முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தி புரிந்துணர்வு போட்டுட்டோம், நியூஸ்ல வந்துருச்சினு இருக்க மாட்டோம். அந்த நிறுவனம் செயல்பாட்டுக்கு வந்து, நம்ம இளைஞர்களுக்கு ஆஃபர் லெட்டர் கையில வர வரைக்கும் பார்த்துப் பார்த்து பாஃலோ செய்கிறோம். ஒரு திட்டத்தை செயல்படுத்துகிறோம் என்றால், அதற்கான ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகும்போதே, அதற்காக என்று Dashboard ஒன்றை உருவாக்கி அதனை நானே Monitor செய்கிறேன்.அந்த Dashboard-ல் எந்த மாவட்டத்தில் திட்டம் வருகிறது, எந்த துறையில் இருந்து அனுமதி தேவை, எவ்வளவு நிலம் கையகப்படுத்த வேண்டும், அடிக்கல் நாட்டும் விழா எப்போது, கட்டுமான பணிகள் தொடக்கம் எப்போது, எத்தனை பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் அதில் இடம்பெற்றிருக்கும். திட்டம் தொடங்கி செயல்பாட்டுக்கு வந்த பிறகு தான் அந்த Dashboard-ஐ நாங்கள் முடிப்போம். இதுதான் எங்களுடைய Working Style!

தமிழ்நாட்டில் மட்டும் ஒப்பந்தம் போட்ட குறுகிய காலத்திலேயே தொழில் நிறுவனங்கள் எப்படி செயல்பாட்டுக்கு வருகிறது என பலரும் கேட்கின்றனர். ஒருங்கிணைத்து பணிகளைச் செயல்படுத்தக் கூடிய அணி, மனித வளம், நிலம் என அனைத்து அம்சங்களும் இங்கே இருக்கின்றன. தமிழ்நாடு தான் முதலீட்டாளர்களின் முதல் முகவரி’ என்று அனைத்து புள்ளி விவரங்களும் சொல்கிறது. இன்று தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி, நாட்டின் சராசரியை விட அதிகமாக (11.19%) இருக்கிறது. கடந்த ஆண்டு இந்தியாவின் உற்பத்தித்துறையின் வளர்ச்சி 4.5%. அதே சமயம் தமிழ்நாட்டின் வளர்ச்சி அதை விட 3 மடங்கு அதிகமாக 14.7% வளர்ச்சியடைந்துள்ளது.”இவ்வாறு தெரிவித்தார்.

Tags : Chief Minister ,MLA K. Stalin ,Chennai ,Tamil Nadu Investment Processing Conference ,Kindi, Chennai ,Stalin ,Mu. K. Stalin ,
× RELATED படித்த இளைஞர்களுக்கு அவர்களின்...