×

கையில் எலிகளுடன் விவசாயிகள் நூதன போராட்டம் ஆரணியில் பரபரப்பு புயலால் பாதித்த நெற்பயிர்களுக்கு நிவாரணம் கோரி

ஆரணி, பிப்.4: புயலால் பாதித்த நெற்பயிர்களுக்கு நிவாரணம் வழங்கக்கோரி ஆரணியில் விவசாயிகள் கையில் எலிகளுடன் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆரணி தாலுகா அலுவலகம் முன்பு நேற்று விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சங்க மாநில தலைவர் புருஷேத்தமன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில், திருவண்ணாமலை மாவட்டத்தில் புயல் மழையால் பாதிக்கப்பட்ட ஒரு லட்சம் விவசாயிகளில் 25 ஆயிரம் பேருக்கு மட்டுமே நிவாரணம் வழங்கியுள்ளனர். மீதமுள்ளவர்களுக்கும் அரசு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும். பேரிடர் நிவாரண நிதி விதிகளை திருத்துவதற்கு மத்திய பேரிடர் நிவாரண பிரிவு இணை செயலாளர் தலைமையில், அனைத்து மாநில செயலாளர்கள் அடங்கிய குழு பரிந்துரையை அமல்படுத்த வேண்டும். புயல் பாதிப்புகளை மத்திய பார்வை குழு ₹3,200 கோடி பயிர் சேதம் மதிப்பீடு செய்து, எக்டருக்கு ₹13,500 ஒதுக்கியுள்ளதை, நெற்பயிர்களுக்கு எக்டருக்கு ₹40 ஆயிரம், வாழை பயிர்களுக்கு ₹1 லட்சம், புஞ்சை, மானாவரி பயிருக்கு ₹30 ஆயிரம் ஒதுக்க வேண்டும்.

படவேடு, கண்ணமங்கலம், ஆதனூர் பகுதிகளில் வாழை பயிர் சேதங்களை வேளாண் அதிகாரிகள் குறைத்து மதிப்பீடு செய்துள்ளனர். அதனால் மத்திய பார்வை குழு அவற்றை பார்வையிட்டு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.
மாவட்டத்தில் நவரை பட்டத்தில் பயிரிட்டுள்ள 1.50 லட்சம் ஏக்கர் நெற்பயிர்களில் எலியால் ஏற்பட்டுள்ள சேதத்தை வேளாண்துறை அதிகாரிகள் முறையாக கணக்கிட்டு மத்திய, மாநில அரசுகள் நிவாரணம் வழங்க வேண்டும். ஊரக வளர்ச்சி துறை மூலம் 100 நாள் வேலை திட்ட பணியாளர்களை கொண்டு வயல்வரப்புகளை சுத்தம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். ேமலும், கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் வரும் சட்டமன்ற தேர்தலில் விவசாயிகள் அனைத்து கட்சிகளை புறக்கணிப்போம், எங்களுக்கு யார் நிவாரணம் பெற்று தருகிறார்களோ அவர்களுக்கு ஆதரவாக இருந்து தேர்தலில் வாக்களிப்போம் என தெரிவித்தனர். முன்னதாக, விவசாயிகள் கையில் எலிகளுடன் வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : storm ,
× RELATED மிக்ஜாம் புயல் பாதிப்பு; 148.54 கோடி...