×

திருச்செங்கோட்டில் இன்று மேற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்'

திருச்செங்கோடு, பிப்.4: நாமக்கல் மேற்கு மாவட்ட  திமுக செயலாளர் கேஎஸ் மூர்த்தி எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கை: நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம், திருச்செங்கோட்டில் இன்று (4ம்தேதி) காலை 10 மணிக்கு மாவட்ட அவைத்தலைவர் நடனசபாபதி  தலைமையில் நடக்கிறது. இதில் மாநில மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்பி வருகை குறித்தும், கட்சி வளர்ச்சி பணிகள் குறித்தும் ஆலோசனை நடக்கிறது. எனவே, மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், நகர, ஒன்றிய, பேரூர்  செயலாளர்கள் மற்றும் மாவட்ட சார்பு அணி அமைப்பாளர்கள் அனைவரும் தவறாமல் கூட்டத்தில் கலந்துகொள்றுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Tags : Western District ,meeting ,DMK Executive Committee ,Tiruchengode ,
× RELATED வாக்காளர்களுக்கு பணம் தருவதை...