டிராக்டர் கவிழ்ந்து வாலிபர் பலி

தேன்கனிக்கோட்டை, பிப்.4: தேன்கனிக்கோட்டை அருகே உள்ள காமையூர் கிராமத்தை சேர்ந்தவர் திம்மராயப்பா மகன் சுனில்குமார்(18). இவர் நேற்று களத்தில் ராகி போர் மீது டிராக்டர் ஓட்டி, கதிரடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது டிராக்டரை பின்நோக்கி இயக்கியபோது, கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் அருகில் உள்ள பள்ளத்தில் பாய்ந்து தலை குப்புற கவிழ்ந்தது. இதில் சுனில்குமார் டிராக்டர் அடியில் சிக்கி, உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். தகவலறிந்த கெலமங்கலம் போலீசார், அவரது சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>