ஜவுளி வியாபாரி மீது தாக்குதல்

கிருஷ்ணகிரி, பிப்.4: டெல்லியை  சேர்ந்த ஜவுளி மொத்த வியாபாரி சுனில் குரோவர்(41). இவரிடம் பர்கூரை  சேர்ந்த ரவிபியா செட்டி(34) என்பவர் ஜவுளி கொள்முதல் செய்திருந்தார். இந்நிலையில், 2  பில் தொகை செலுத்திய நிலையில், ஒரு பில் தொகையான ₹60 லட்சத்தை ரவிபியா செட்டி  கொடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இதனால், சுனில் குரோவர் டெல்லியில் இருந்து போனில் தொடர்பு  கொண்டு ரவிபியாசெட்டியிடம் பணத்தை கேட்டார். அப்போது அவர்களுக்குள்  வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, நேற்று முன்தினம், சுனில் குரோவர் பர்கூர் வந்து  ரவிபியாசெட்டியிடம் பணத்தை கேட்டுள்ளார். அப்போது ஏற்பட்ட  தகராறில் ஆத்திரமடைந்த ரவிபியா செட்டி, சுனில் குரோவரை தாக்கியுள்ளார்.  இதில் காயமடைந்த சுனில் குரோவர், பர்கூர் அரசு மருத்துவமனையில்  சிகிச்சைக்காக சேர்ந்தார். அவர் கொடுத்த புகாரின் பேரில் பர்கூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

Related Stories:

>