×

கொரோனா கட்டுப்பாட்டால் பழநிக்கு 3 காவடி மட்டுமே செல்ல முடிவு

காரைக்குடி: கொரோனா கட்டுப்பாடு காரணமாக பழனிக்கு நகரத்தார் காவடி 400 செல்லும் நிலையில் இந்த ஆண்டு 3 காவடி மட்டும் செல்கிறது.காரைக்குடி, தேவகோட்டை உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து நகரத்தார் சார்பில் 400 ஆண்டுகளுக்கு மேலாக பழனிக்கு பாதையாத்திரையாக காவடி எடுத்துச் செல்வது வழக்கம். ஒவ்வொரு ஆண்டும் 400க்கும் மேற்பட்டவர்கள் காவடி எடுத்துச் சென்று நேர்த்திகடன் செலுத்துவார்கள். இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடு காரணமாக 3 காவடிகள் மட்டும் எடுத்து செல்லப்பட உள்ளது.இதுகுறித்து அரண்மனை பொங்கல் பழனியப்பன் கூறுகையில், 400 ஆண்டுகளுக்கு மேலாக பழனி பாதையாத்திரை இந்த ஆண்டு காரைக்குடியில் இருந்து ஒரு காவடி புறப்பட்டு செல்கிறது. கொரோனா காரணமாக அரசு வழிமுறைக்கு உட்பட்டு குன்றக்குடியில் இருந்து நகரத்தார் சார்பில் கட்டளை, கடமைக்காக உள்ள காவடிகளை வைத்து இந்த ஆண்டு யாத்திரை நடத்த உள்ளோம்.வழக்கமாக காரைக்குடியில் இருந்து 80 காவடி என பல்வேறு பகுதிகளில் இருந்து 400 காவடி குன்றக்குடியில் இருந்து புறப்படும். இந்த ஆண்டு மொத்தம் 3 காவடிகள் குன்றக்குடியில் இருந்து எங்கள் சமூகத்தின் சார்பில் புறப்பட்டு கடமைகளை செய்யவுள்ளனர். இது கடமைகளுக்காக உள்ள காவடி பிரார்த்தானை காவடி இல்லை. 20 நாட்கள் பயணம் செய்வோம். போகும் போது நடந்து பழநியில் 5 நாட்கள் பூஜை நடத்துவோம் திரும்பி வரும்போதும் நடந்து வருவோம் என்றார்….

The post கொரோனா கட்டுப்பாட்டால் பழநிக்கு 3 காவடி மட்டுமே செல்ல முடிவு appeared first on Dinakaran.

Tags : Palaniku ,Karaikudi ,Palani ,
× RELATED அரசு மருத்துவமனைக்கு கூடுதலாக டவுன்...