×

பாஜ மகளிரணி போராட்டத்துக்கு போராடி அழைச்சிட்டு வரப்பட்ட மூதாட்டிங்க.. நயினாரின் சொந்த ஊர்லதான் இப்படிங்க…

 

 

நெல்லை: பாஜ மகளிர் அணி சார்பில் பெண்களுக்கு பாதுகாப்பு கோரி நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் முன்பாக நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் மாவட்ட, மாநில மகளிர் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு கணக்கு காட்டுவதற்காக அதிகமான மூதாட்டிகள் அழைத்து வரப்பட்டிருந்தனர். அப்படி இருந்தும் ஆர்ப்பாட்ட மேடைக்கு முன்பாக போதிய மகளிர் அணியினர் இல்லாத நிலை காணப்பட்டது. வந்திருந்த மூதாட்டிகளும் ஆர்ப்பாட்டத்தில் நிற்க முடியாததால் அருகே இருந்த பெஞ்சில் அமர்ந்து தங்களை ஆசுவாசுப்படுத்தி கொண்டனர். பெண்கள் ஆர்ப்பாட்டம் என அறிவித்த போதிலும் அதிகளவு பாஜவை சேர்ந்த ஆண் நிர்வாகிகள்தான் இருந்தனர். கொண்டுவந்த கொடியை தூக்கி பிடிக்கவும், கோஷம் போடவும் ஆட்கள் இல்லாததால் கொடிகள் சுருட்டி வாகனத்தில் வைக்கப்பட்டிருந்தன.

ஆனால் பாஜ தொண்டர்கள் பலரும் போட்டி போட்டு கொண்டு ‘நான் வந்துட்டேன்னு சொல்லு’ என்ற சினிமா பாணியில் முகநூலில் பதிவு செய்வதற்காக செல்பி எடுப்பதில் மட்டும் ஆர்வம் காட்டியதை பார்க்க முடிந்தது. இதனால் ஆர்ப்பாட்டம் பிசுபிசுத்து போனது. மண்ணின் மைந்தர் என்று வர்ணிக்கப்படும் பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரனின் சொந்த ஊரில், அவரது சொந்த தொகுதியில் நடந்த மகளிர் அணி போராட்டத்துக்கு கூட மவுசு இல்லையே என பொதுமக்களும் மற்றும் கூட்டணி கட்சியினரும் பேசிக் கொண்டனர்.

Tags : Mudhatinghe ,Nayana ,Nella ,Nella Encounter ,Bajaj Women's Team ,
× RELATED ஆவடி சட்டமன்ற தொகுதி பாஜவுக்கு...