×

ஆன்லைன் கேம் விளையாடிய மாணவன் இறந்தது எப்படி?

வில்லியனூர்,  பிப். 4:  புதுச்சேரியில் ஆன்லைன் கேம் விளையாடிய பிளஸ்2 மாணவன்  இறப்புக்கான காரணம் குறித்து ஜிப்மரில் நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையில்  திடுக் தகவல் கிடைத்துள்ளது. புதுச்சேரி, வில்லியனூர், மணவெளியைச்  சேர்ந்தவர் பச்சையப்பன் மகன் தர்ஷன் (16). பிளஸ்2 மாணவரான இவர் தொடர்ந்து 4  மணி நேரம் ஆன்லைனில் பயர்வால் கேம் விளையாடிய நிலையில் மயங்கி விழுந்து  இறந்தார். இச்சம்பவம் பெற்றோர், உறவினர்களை அதிர்ச்சியடைய செய்தது.

இதுதொடர்பாக வில்லியனூர் போலீசார் வழக்குபதிந்து விசாரணை மேற்கொண்டனர்.  ஜிப்மரில் மாணவரின் உடல் நேற்று முன்தினம் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு  உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதில், மாணவன் தர்ஷன் தொடர்ந்து 4 மணி  நேரம் ஹெட்செட் அணிந்து ஆன்லைன் துப்பாக்கி சுடுதல் கேமை விளையாடிய  நிலையில், மூளை சூடாகி ரத்த ஓட்டம் அதிகரித்ததில் நரம்பு வெடித்து  உயிரிழந்தது தெரியவந்துள்ளது.

இதுகுறித்த அறிக்கை போலீசுக்கு வந்தவுடன்  பள்ளி வாரியாக மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கையை  மேற்கொள்ள அரசுக்கு காவல்துறை பரிந்துரைக்க முடிவு செய்துள்ளது. இதனிடையே புதுவையில் தடைசெய்யப்பட்ட ஆன்லைன் விளையாட்டுகளை அரசு கண்காணித்து தடை  செய்ய வேண்டுமென அரசியல் கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும் வலியுறுத்தி  உள்ளன.

Tags : student ,
× RELATED கோவை கல்லூரி மாணவர்கள் உருவாக்கிய...