×

சக்திமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் பக்தர்கள் தீர்த்தகுட ஊர்வலம்

அவிநாசி, பிப். 4:  அவிநாசி அருகே அ.குரும்பபாளையம்  சக்தி விநாயகர்,  சக்தி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் பிப்.7ம் தேதி நடைபெறவதையொட்டி, அவிநாசி லிங்கேஸ்வரர் கோயிலில் இருந்து நேற்று ஏராளமான பக்தர்கள் தீர்த்தக்குடம் எடுத்து வந்தனர். அவிநாசி அருகே அ.குரும்பபாளையத்தில்  சக்தி விநாயகர், ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோயில், ஸ்ரீ பட்டத்தரசியம்மன், ஸ்ரீ கன்னிமார் சுவாமி கும்பபிஷேக விழா நேற்று கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.

காலை 8 மணிக்கு அவிநாசி லிங்கேஸ்வரர் கோயிலில் இருந்து பக்தர்கள்  தீர்த்தக்குடம் எடுத்து அவிநாசி சேவூர் ரோட்டின் வழியாக கோயிலை வந்தடைந்தனர். இதையடுத்து முளைப்பாரி எடுத்து வருதல் நிகழ்ச்சி நடந்தது. இன்று (4ம் தேதி) விநாயகர் பூஜை, கும்பஅலங்காரம், யாகசாலை பிரவேசமும், 5ம் தேதி விநாயகர் பூஜை, கோ பூஜையும், இரண்டாம் கால யாக வேள்வியும், சக்தி விநாயகர், ஸ்ரீசக்தி மாரியம்மன் கோயில் ஸ்ரீ பட்டத்தரசியம்மன், ஸ்ரீ கன்னிமார் சுவாமிகள் பிரதிஷ்டையும், மூன்றாம் கால யாக பூஜையும், 6ம் தேதி நான்காம் கால யாக வேள்வியும், ஐந்தாம் கால யாக வேள்வியும் நடைபெறுகிறது.

இதைத்தொடர்ந்து 7ம் தேதி காலை 8 மணி முதல் 9 மணிக்குள் ஸ்ரீ சக்தி விநாயகர், ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோயில்  பட்டத்தரசியம்மன்,  கன்னிமார் சுவாமிகளுக்கு மஹா கும்பாபிஷேகம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. தொடர்ந்து 9 மணிக்கு மேல் மஹா அபிஷேகம், அலங்கார பூஜை, தசதானம், தச தரிசனம் மற்றும் அன்னதானம் நடைபெறுகிறது.

Tags : Devotees ,Sakthimariamman Temple Kumbabhishekam ,Tirthaguda ,
× RELATED சித்திரை திருநாளை முன்னிட்டு...