×

பராமரிப்பு பணி முடிந்து 2 ஆண்டு ஆகியும் பயன்பாட்டுக்கு வராத சுகாதார வளாகம்

ஈரோடு, பிப்.4:நம்பியூர் அருகே கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாகியும் சுகாதார வளாகம் செயல்படாமல் உள்ளதால் கிராம மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். நம்பியூர் தாலுகாவுக்குட்பட்ட குருமந்தூர் ஊராட்சியில் 3500க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். தனிநபர் இல்லக்கழிப்பிடங்கள் மிகவும் குறைவாக உள்ளதால் திறந்த வெளிப்பகுதிகளை கழிப்பிடங்களாக பயன்படுத்தி வந்தனர். இதனால், ஊரக வளர்ச்சி துறையின் சார்பில் குருமந்தூர் அம்மன்கோயில் அருகில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு என தனியாக சுகாதார வளாகம் கட்டப்பட்டது.

பராமரிப்பு பணிகளுக்காக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்ட சுகாதார வளாகம் பணிகள் முடிக்கப்பட்ட பிறகும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வராமல் ஊராட்சி நிர்வாகம் மெத்தன போக்கினை கடைபிடித்து வருவதால் பெண்கள் மீண்டும் பழையபடி திறந்த வெளிப்பகுதிகளை கழிப்பிடங்களாக பயன்படுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால், அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது.

Tags : completion ,
× RELATED பாலக்காட்டில் எம்பி தொகுதி நிதி ரூ.2.26...