×

குன்னூர், பந்தலூரில் திமுக சார்பில் அண்ணா நினைவு நாள் அனுசரிப்பு

குன்னூர், பிப்.4:அண்ணாவின் 51வது நினைவு நாள் மவுன ஊர்வலம் நடந்தது. மாவட்ட செயலாளர் முபாரக் தலைமை தாங்கினார். குன்னூர் நகரச் செயலாளர் ராமசாமி முன்னிலை வகித்தார். குன்னூர் அரசினர் லாலி மருத்துவமனையில் இருந்து   குன்னூர் பேருந்து நிலையத்திற்கு ஊர்வலம் சென்றது. அங்கு அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில், மாநில சிறுபான்மை பிரிவு துணைச் செயலாளர் அன்வர்கான், பொதுக்குழு உறுப்பினர்கள் சதக்கத்துல்லா, செல்வம், ஷீலா கேத்தரின், வாசிம் ராஜா நகர அவைத்தலைவர் ஆரோக்கியதாஸ், நகரத் துணைச் செயலாளர் முருகேசன், நகர  பொருளாளர் ஜெகநாத் ராவ், மாவட்ட பிரதிநிதிகள் ஜாகிர் உசேன், பழனிச்சாமி மாவட்ட மருத்துவர் அணி  அமைப்பாளர் மருத்துவர் பவிஸ், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் முருககுமார், மாவட்ட கலை இலக்கிய அணியின் துணை அமைப்பாளர் மணிகண்டன், மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் ஜேசிபி நந்தகுமார், நகர இளைஞரணி அமைப்பாளர் பத்மநாபன், துணை அமைப்பாளர் பிரவீன் செலின், பாலகிருஷ்ணன், நகர மாணவரணி  அமைப்பாளர் பிரதீப், ஸ்மார்ட் சாதிக், நகர பொறியாளர் அணி அமைப்பாளர் சந்திப்
மற்றும் கிளை செயலாளர்கள் பிரதிநிதிகள் மற்றும் கழக முன்னணியினர் கலந்துகொண்டனர்.  அதன்பிறகு, குன்னூர் வி,.பி தெரு கலைஞர் திடலில்  குடியுரிமைச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கையெழுத்து இயக்கம் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியின் சார்பில் நடந்தது. இதில் ஏராளமான பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து கையெழுத்திட்டனர்.

பந்தலூர்: அண்ணாவின் நினைவு தினம் நேற்று பந்தலூரில் நெல்லியாளம் நகர திமுக சார்பில் அனுஸ்டிக்கப்பட்டது நகர செயலாளர் காசிலிங்கம் தலைமையேற்று அண்ணாவின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மறியாதை செலுத்தினர் .நிகழ்ச்சியில் நகர துணை செயலாளர் சிவசுப்ரமணியம், பொருளாளர் தென்னரசு, நகர இளைஞரணி அமைப்பாளர் முரளிதரன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சேகரன், மாவட்ட பிரதநிதிகள் நாகராஜ், ராமச்சந்திரன், முன்னாள் நகர் மன்ற தலைவர் அமிர்தலிங்கம் மற்றும் நகர நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், கிளை கழகம் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Tags : Anna Memorial Day ,DMK ,Pandharpur ,Coonoor ,
× RELATED திமுகவின் சாதனைகளை கூறி வாக்கு சேகரிக்க வேண்டும்