×

பிங்கர்போஸ்ட் - பட்பயர் சாலையில் ஆர்சி. காலனி பகுதியில் சிதறி கிடக்கும் மரத்துண்டுகளால் விபத்து அபாயம்

ஊட்டி, பிப். 4: பிங்கர்போஸ்ட் பகுதியில் இருந்து ஆர்சி., காலனி வழியாக பட்பயர் செல்லும் சாலையோரங்களில் போடப்பட்டுள்ள மரங்களால் விபத்து அபாயம் ஏற்படுகிறது. ஊட்டி அருேகயுள்ள பட்பயர் பகுதிக்கு பிங்கர்போஸ்ட் பகுதியில் இருந்து ஆர்சி. காலனி வழியாக ஒரு சாலை செல்கிறது. இச்சாலையின் இரு புறங்களிலும் ராட்சத கற்பூர மரங்கள் உள்ளன. தென்மேற்கு, வடகிழக்கு பருவமழையின் போது, காற்று வீசும் சமயங்களில் இந்த மரங்கள் விழுவது வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில், கடந்த ஆண்டு பெய்த மழையின் போது, ஆர்சி. காலனி அருகேயுள்ள கற்பூர மரங்கள் சாலையின் குறுக்கே விழுந்தது. இந்த மரங்கள் உடனுக்குடன் அகற்றப்பட்டு போக்குவரத்து சீரமைக்கப்பட்டது.

ஆனால், அகற்றப்பட்ட மரத்துண்டுகள் சாலையோரங்களிலேயே போடப்பட்டள்ளது. இதனால், சில மரத்துண்டுகள் சாலையிலேயே கிடக்கிறது. இதனால், இவ்வழித்தடத்தில் செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்குகின்றன. குறிப்பாக, இரவு நேரங்களில் இவ்வழித்தடத்தில் செல்லும் இரு சக்கர வாகன ஓட்டுநர்கள் இங்கு விபத்தில் சிக்குகின்றனர். எனவே, பொதுமக்கள் நலன் கருதி பிங்கர்போஸ்ட் பகுதியில் இருந்து ஆர்சி. காலனி வழியாக பட்பயர் செல்லும் சாலையோரங்களில் விழுந்து கிடக்கும மரத்துண்டுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags : Buttefire Road ,colony area ,
× RELATED வேளச்சேரி ஏ.ஜி.எஸ். காலனி பகுதியில்...