×

அரசு பஸ்களின் எரிபொருள் செலவை குறைக்க அதிரடி பல வழித்தடங்களில் சில ‘டிரிப்கள்’ கட்

ஊட்டி, பிப். 4: நீலகிரி மாவட்டத்தில் போக்குவரத்து கழகம் எரிப்பொருள் செலவை குறைக்க பல வழித்தடங்களில் இயக்கப்பட்டு வந்த பஸ்களை ரத்து செய்து வருகிறது. அதற்கு மாற்றாக, ஏற்கனவே அவ்வழித்தடங்களில் இயக்கப்பட்டு வரும் வேறு பஸ்களை நேரம் மாற்றி இயக்கி வருகிறது.
நீலகிரி மாவட்டம் மலை மாவட்டம் என்பதால், அனைத்து பகுதிகளுக்கு செல்லும் வழித்தடங்களும் செங்குத்தான மலைகளில் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோல், சமவெளிப் பகுதிகளுக்கு இயக்கப்படும் பஸ்களும் மேட்டுப்பாளயைம் வரை மலைப்பாங்கான பகுதிகளில் இயக்க வேண்டியுள்ளது.

இம்மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான சாலைகள் குறுகலாக உள்ளதால், சிறிய பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. மேலும், சமவெளிப் பகுதிகளை போன்று டாப் கியர்களிலும் பஸ்களை இயக்க முடியாது. இதனால், சமவெளிப் பகுதிகளை காட்டிலும் இங்கு இயக்கப்படும் அரசு பஸ்களின் எரிப்பொருள் செலவு கூடுதலாகிறது. சமவெளிப் பகுதகிளில் இயக்கப்படும் அரசு பஸ்கள் ஒரு லிட்டருக்கு 5 கிமீ., மைலேஜ் கொடுத்தால், இங்கு 3.5 கிமீ., மைலேஜ் கொடுப்பதே கடினம். இதனால், மேடான பகுதிகளிலும் குறைந்த வேகத்திலும், தாழ்வான பகுதிகளில் டாப் கியர்களிலும் இயக்க போக்குவரத்து கழகம் அறிவுறுத்துகிறது. ஆனால், இது பாதுகாப்பானது இல்லை.

மேலும், அதிக பயணிகளை ஏற்றி வரும் டீசல் செலவு அதிகரிக்கிறது. இதனால், ஏற்கனவே, பல கோடி நஷ்டத்தில் இயங்கி வரும் போக்குவரத்து கழகம் மேலும், நஷ்டத்திற்கே தள்ளப்படுகிறது. இந்நிலையில், நஷ்டம் மற்றும் எரிப்பொருள் செலவை குறைக்க போக்குவரத்து கழகம் முதற்கட்டமாக சிறிய பஸ்கள் ஓடிக்கொண்டிருந்த பெரும்பாலான வழித்தட்களில் பெரிய பஸ்களை இயக்கத்துவங்கியது. இதன் மூலம் அதிகளவு பயணிகளை ஏற்றி வரலாம். அதேசமயம், அந்த வழித்தடங்களில் ஒரே சமயத்தில் ஓடிக்கொண்டிருந்த சில பஸ்களை ரத்து செய்தது. ஆனால், அதுவும் சாத்தியப்படவில்லை.

இந்நிலையில், எரிப்பொருளை குறைக்க தற்போது பெரும்பாலான வழித்தடங்களில் இயக்கப்பட்டு வந்த அரசு பஸ்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், கூடுதலாக ஒரு வழித்தடத்தில் இயக்கப்பட்டு வந்த டிரிப்புகளையும் ரத்து செய்து விட்டது. அதற்கு பதிலாக தற்போது வேறு வழித்தடங்களில் தேவையற்ற சமயங்களில் (நேரங்களில்) இயக்கப்பட்டு வந்த பஸ்கள் வழித்தடம் மாற்றி இயக்கப்படுகிறது. அதாவது, ஒரு சிங்கிள் அல்லது இரு சிங்கிள் ரத்து செய்யப்படுகிறது.

ஒரு வழித்தடத்தில் ஒரு பஸ் ரத்து செய்யப்படுவதன் மூலம் ஒரு நாளுக்கு குறைந்தபட்சம் 50 முதல் 80 லிட்டர் வரை டீசல் மிச்சப்படுத்த முடியும். போக்குவரத்து கழகம் தற்போது நீலகிரி மாவட்டத்தில் பயணிகளுக்கு பாதிக்காமலும், அதேசமயம், எரிப்பொருள் செலவை குறைக்கு முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறது. இதன் மூலம் போக்குவரத்து கழகத்தின் நஷ்டத்தை ஓரளவு குறைக்க முடியும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Tags : trips ,routes ,
× RELATED நீல நிறத்தில் புதிய தாழ்தள டவுன்...