×

ஆலயம் சார்பில் ஸ்கேட்டிங் சாம்பியன் போட்டி

கோவை, பிப்.4:  கோவை ஆலயம் நல்வாழ்வு அறக்கட்டளை சார்பில் வ.உ.சி மைதான வளாகத்தில் உள்ள ஸ்கேட்டிங் தளத்தில் ஸ்கேட்டிங் சாம்பியன் 2020 போட்டி  நடந்தது. போட்டியை ஆலயம் அறக்கட்டளை இயக்குநர் டாக்டர் ஷர்மிளா சந்திரசேகர் துவக்கி வைத்தார். இதில், எம்எல்ஏக்கள்  அருண்குமார், அம்மன் அர்ஜுனன், எட்டிமடை சண்முகம், ஆலயம் அறக்கட்டளை சேர்மன் இன்ஜினியர் சந்திரசேகர் உட்பட பலர் பங்கேற்றனர். நகர் பகுதியில் பள்ளி மாணவர்களின் ஸ்கேட்டிங் திறனை மேம்படுத்தும் வகையில் ஆலயம் டிராபிக்கான சாம்பியன்ஷிப் நடத்தப்பட்டது. இன்லைன் மற்றும் ஸ்குவாட் என இரு பிரிவாக போட்டி நடத்தப்பட்டது. இதில் 5 வயது முதல் 17 வயது வரை உள்ள 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

ஸ்குவாட் பிரிவில் நிதர்சனா, கவின்யா, ஜெனிசா, ஹிமான்ஷ், கவின், ஹர்சாக், மிதுர்னா, பிரனேஷ் வெற்றி பெற்று பதக்கம் வென்றனர். இன்லைன் பிரிவில் கலைசெல்வி, ஹரிகரசுதன், அயனாலி, ஜோயல், மிருணாள், சாய்சிவம், ஷிபா, தரணிஷ், ஜாஸ்மின், தரண்யா, தருண் ரிஷி, அபினவ், கார்த்திக்நாதன் வெற்றி பெற்று பதக்கம் வென்றனர்.   போட்டியில் முதல் பரிசாக தங்க பதக்கம், இரண்டாம் பரிசாக வெள்ளி,   மூன்றாம் பரிசாக வெண்கல பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ஆலயம் நல்வாழ்வு அறக்கட்டளை நிர்வாகம்  செய்திருந்தது.

Tags : champion competition ,
× RELATED அவனியாபுரத்தில் சிலம்பாட்ட சாம்பியன் போட்டி