×

அண்ணா நினைவு நாள் பேரூர் கோயிலில் பொது விருந்து

தொண்டாமுத்தூர்,பிப்.4:அண்ணா நினைவு நாளை முன்னிட்டு பேரூர் பட்டீஸ்வரர் கோயிலில் நேற்று சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நடைபெற்றது. கோயில் வளாகத்தில் சாதி, சமய வேறுபாடின்றி அனைத்து இன மக்களும் கலந்து கொள்ளும் வகையில் சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து மதியம் 12.30 மணிக்கு நடைபெற்றது. இதில் கோவை மாவட்ட சிவபக்தர்கள் நல சங்க தலைவர் பேரூர் ராஜேந்திரன், பிரதோஷ வழிபாட்டுக்குழு, இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். புட்நோட் பேரூர் பட்டீஸ்வரர் கோயிலில் அண்ணா நினைவு நாளையொட்டி சமபந்தி விருந்து நடைபெற்றது.

தொண்டாமுத்தூர்:கோவை அருகே பேரூர் நகர கழகம்  சார்பில் குடியுரிமை திருத்த சட்டத்தினை வாபஸ் பெறக் கோரி கையெழுத்து  இயக்கம் நடைபெற்றது. இதில் பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு  கையெழுத்திட்டனர். ஒன்றிய செயலாளர் மருதமலை சேனாதிபதி தலைமையில், நகர செயலாளர்  அண்ணாதுரை, ஒன்றிய பிரதிநிதி தாமரை செல்வன் முன்னிலையில் பஸ் ஸ்டாண்ட், காய்கறி சந்தை, பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் குடியிருப்பு திருத்த மசோதாவினை வாபஸ் பெற வலியுறுத்தி கையெழுத்து பெறப்பட்டது. திமுகவினருடன், காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களும் கலந்து கொண்டு கையெழுத்து இயக்கத்தினை சிறப்பாக மேற்கொண்டனர். பேரூர் நகர கழகம் சார்பில் 50 ஆயிரம் பேரிடம் கையெழுத்து வாங்குவதற்காக தொடர்ந்து தினம் தோறும் திமுகவினர் வீடு,வீடாக சென்று கையெழுத்து பெற்று வருகின்றனர். புட்நோட் பேரூர் ஒன்றிய திமுக செயலாளர் மருதமலை சேனாதிபதி தலைமையில் திமுகவினர் பொதுமக்களிடம் கையெழுத்து பெற்றனர்.

Tags : Anna Memorial Day Public Feast ,Perur Temple ,
× RELATED கோவை மாவட்டம் பேரூர் கோயிலில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சுவாமி தரிசனம்