×

எம்.ஜி.ஆர். மார்க்கெட் இடமாற்றம்

கோவை, பிப்.4: கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்திற்குட்பட்ட எம்.ஜி.ஆர். மார்க்கெட்டை இடநெருக்கடி காரணமாக கவுண்டம்பாளையம் அருகே இடமாற்றம் செய்ய மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதற்கான பணிகள் விரைவில் துவங்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.கோவை மேட்டுப்பாளையம் சாலையில் புதிய பேருந்து நிலையம் எதிரே எம்.ஜி.ஆர். மார்க்கெட் அமைந்துள்ளது. மாநகராட்சியின் மேற்கு மண்டலத்திற்குட்பட்ட இந்த மார்க்கெட்டில் மொத்தம் 112 காய்கறி கடைகள். இங்கு காய்கறிகள் மொத்தமாகவும், சில்லறையாகவும் கிடைக்கும். குறிப்பாக கேரளாவிற்கு தினமும் 100 டன் அளவில் தக்காளி, மூட்டைகோஸ், கேரட், பீன்ஸ், வெங்காயம் போன்ற காய்கறிகள் லாரிகள் மூலம் அனுப்படுகின்றன.

அதே போல் ஊட்டி, கர்நாடக மாநிலம் ஆகிய பகுதிகளில் விவசாயம் செய்யப்படும் காய்கறிகளும் இந்த மார்க்கெட்டில் கொள்முதல் செய்யப்படுகின்றன. அதிகாலை 3 மணி முதலே இங்கு வியாபாரம் சூடுபிடிக்க துவங்கிவிடும். தினமும் ஆயிரக்கணக்கான வியாபாரிகளும் வந்து செல்கின்றனர். இதனிடையே எம்.ஜி.ஆர். மார்க்கெட் இடநெருக்கடிக்கு மத்தியில் செயல்படுவதால் புதிய பேருந்து நிலையம் அருகே போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனை தடுக்கும் விதமாக கவுண்டம்பாளையம் அருகே எம்.ஜி.ஆர். மார்க்கெட்டை இடமாற்றம் செய்ய மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘கவுண்டம்பாளையம் பகுதியில் மாநகராட்சியின்  எம்.ஜி.ஆர். மார்க்கெட்டை இடமாற்றம் செய்ய ஆலோசனை மேற்கொண்டு வருகிறோம். விரைவில் வியாபாரிகள், பொதுமக்கள் கருத்துகளை கேட்டறிந்த பின்பு இந்த இடமாற்றத்திற்கான திட்டம் செயல்படுத்தப்படும்’’ என்றார்.

Tags : M.G.R. ,
× RELATED எம்.ஜி.ஆர். ஜெயலலிதாவின் தொண்டர்கள்...